டெல்லி: தனியார் டாக்டர்கள் அதிக அளவில் உறுப்பினர்களாக உள்ள அமைப்பு, இந்திய மருத்துவ சங்கம். இதில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில், தேசிய மருத்துவ ஆணையம் பற்றிய பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுகளை எதிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஹோமியோபதி, ஆயுர்வேதம் படித்தவர்கள், ஒரு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்க்கலாம், டாக்டராக தொழில் செய்வதற்கு முன்பு, தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட சிபாரிசுகளை நிலைக்குழு செய்துள்ளது.
இந்த சிபாரிசுகள் வஞ்சகமானவை என்று இந்திய மருத்துவ சங்க தலைவர் ரவி வங்கேட்கர் குற்றம் சாட்டினார். எனவே, இவற்றை கண்டித்து, நாடு முழுவதும் டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் ஏப்ரல் 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்.