பெங்களூரில் கைது செய்யப்பட்ட உறவினர்களை விடுவிக்க கோரும் இலங்கைவாழ் தமிழர்கள்

Sri Lanka: இந்தியாவில் பிடிபட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை வாழ் தமிழர்கள்

Last Updated : Sep 18, 2022, 08:45 PM IST
  • உறவினர்களை காப்பாற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை வைக்கும் இலங்கை தமிழர்கள்
  • வெளிநாட்டிற்கு வெளியேறிச் செல்லும் இலங்கை மக்கள்
  • சட்டவிரோதமாக பெங்களூருவுக்கு வந்த இலங்கை தமிழர்களை கைது செய்த போலீசார்
பெங்களூரில் கைது செய்யப்பட்ட உறவினர்களை விடுவிக்க கோரும் இலங்கைவாழ் தமிழர்கள் title=

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் அண்டை நாடுகளுக்கு செல்லும் இலங்கை மக்களில் சிலர் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்ததால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள்ல் கோரிக்கை விடுத்துளனர். தமது குடும்பத்தினை எவ்வாறாயினும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக அவர்கள் முயன்றனர். இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரில் வைத்து கைதுசெய்யப்பட்ட 38 பேரையும் விடுவிக்குமாறு அவர்களது உறவினர்கள், இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கடந்த 10.06.2021 அன்று இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த 38 பேரை இந்திய மத்திய புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர். இவர்கள் வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பு சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லமுற்பட்டதாக கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க | ரஷ்யாவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் வசதி விரைவில்!

அவர்கள் கர்நாடகாக போலீசாரிடம் ஒப்டைக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மார்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில், இலங்கையில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், வெளிநாட்டு அமைச்சகம் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு தெரியப்படுத்தியும் தமது உறவுகளுக்குக் என்ன நடந்து என்பது இதுவரை தெரியில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில், பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 38 போரின் உறவினர்களும் இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில், கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமது உறவுகளை இந்தியா விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேலும் படிக்க | தென்னிந்தியாவில் ஜப்பான் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்வு

அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதற்கு பிறகு, என்ன நடந்தது, அவர்கள் எங்கு எப்படி இருக்கின்றார்கள் என்ற எந்த தகவலும் தொடர்பும் தங்களுக்கு இல்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தியாவின் கர்நாடாக பெங்களுர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமது உறவுகளை விரைவில் விடுதலை செய்ய அனைத்து தரப்பினரும் ஆவண செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளாக மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றார்கள் சட்டவிரோதமான முறையில் படகுகளில் செல்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | NRI Investment Options: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான டாப் முதலீட்டு திட்டங்கள்

மேலும் படிக்க | ஐரோப்பிய நாடுகளில் வேலை தேடுவோருக்கு GOOD News! 7 EU நாடுகளின் முக்கிய அறிவிப்புகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News