இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் பல மடங்கு விலை உயர்ந்து இருந்தாலும் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அங்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளை தேடி அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்து அகதிகளாக இடம் பெயர்ந்து வரும் நிலையில், ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு பகுதியில் ஒரு குடும்பம் மற்றும் தனி நபர் ஒருவரை சேர்த்து 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | கொந்தளிப்பில் இலங்கை; அடுத்தது சீனாவில் வலையில் சிக்கிய பாகிஸ்தானா...
ஏற்கனவே 30 குடும்பங்களை சேர்ந்த 117 நபர்கள் அகதிகளாக மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சம் அடைந்தவர்களை கடலோர காவல் குழுமம் போலீசார் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அகதிகளாக வந்தவர்களை கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலையினால், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டு வருகின்றன. மக்கள் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர். ஆத்திரமடைந்த மக்கள், அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் ஆகியவற்றை சூறையாடியதை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் மஹிந்தா ரஜபக்சே பதவி விலகினார். அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓடி சிங்கப்பூருல் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR