இலங்கையில் தமிழக நிவாரணப் பொருட்களின் விநியோகம் துவங்கியது

தமிழகத்தை பொருத்தவரை இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களுடன் எப்போதும் ஒரு தனித்துவமான இணைப்பு உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2022, 07:09 PM IST
  • தமிழகத்தை பொருத்தவரை இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களுடன் எப்போதும் ஒரு தனித்துவமான இணைப்பு உள்ளது.
  • இலங்கை மக்களுக்காக அனுப்பி வைத்த பொருளட்கள் இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தை சென்றடைந்தன.
  • கொண்டு வரப்பட்ட பொருட்கள் புகையிரத நிலையத்தில் வைத்து உடனடியாக பயணாளிகளிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இலங்கையில்  தமிழக நிவாரணப் பொருட்களின் விநியோகம் துவங்கியது title=

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இலங்கை மக்களுக்காக அனுப்பி வைத்த பொருளட்கள் இதற்காக பிரத்யேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட ரயில் மூலம் இன்று அதிகாலை  யாழ்ப்பாணத்தை சென்றடைந்தன.

யாழ்ப்பாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட பொருட் களில் 40 வீதமானவற்றை இந்த ரயிலில் ஏற்றக்கூடிய வசதிகள் இருந்ததால், யாழ்பாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 20 ஆயிரம் அரிசி மூடைகளில் 8 ஆயிரத்து 755 மூடைகளும்,  500 பைக்கற் பால் மாவும் மட்டுமே தற்போது எடுத்து வரப்பட்டன.

இவ்வாறு  எடுத்து வரப்பட்ட  பொருட்களில் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குரியவை பளை ரயில் நிலையத்திலும், சாவகச்சேரி, பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குரியவை சாவகச்சேரி ரயில் நிலையத்திலும் இறக்கப்பட்டன. அதேநேரம் எஞ்சியவை யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வைத்து யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர்  ராகேஷ்  நட்ராஜினால்  மாவட்டச் செயலாளரிடம் கையளிக்க மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளர்களிடம்  ஒப்படைத்தார். 

மேலும் படிக்க | பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை: உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு 

இந்தப் பொருட்களில் வேலணை பிரதேச செயலகப் பிரிவில் 3,000 குடும்பங்களுக்கும், ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் 2,750 குடும்பங்களுக்கும், காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 2,500 குடும்பங்களுக்கும் நெடுந்தீவுப் பிரதேச செயலகப் பிரிவில் 1,200 குடும்பங்களுக்கும், மருதங்கேணி செயலகப் பிரிவில் 3,750 குடும்பங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட அளவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

கொண்டு வரப்பட்ட பொருட்கள் புகையிரத நிலையத்தில் வைத்து உடனடியாக பயணாளிகளிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

முன்னதாக, கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. இந்த நிலையில், அண்டை நாடான இந்தியா பல விதங்களில் இலங்கை அரசுக்கும், இலங்கை மக்களுக்கும் உதவி வருகிறது.

தமிழகத்தை பொருத்தவரை இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களுடன் எப்போதும் ஒரு தனித்துவமான இணைப்பு உள்ளது. அந்த வகையில், தமிழகம் சார்பில் இலங்கையில் நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு உதவ பலவித முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வேண்டுகோளை அடுத்து, திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளத்தை இலங்கை நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இலங்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிக்குமாறு தமிழக மக்களிடம் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 

மேலும் படிக்க | தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் நிவாரண பொருட்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News