சிங்கப்பூர்: அண்மையில், சிங்கப்பூர் அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்ததைத் தொடர்ந்து, விமான பயணத்தை மேற்கொள்ள பலர் ஆர்வமாக உள்ளனர்.
இதை அடுத்து, சாங்கி விமான நிலையத்தின் T 2 முனையத்தை வரும் 29 மே முதல் படிப்படியாக மீண்டும் செயல்பட தொடங்கும் என்று சாங்கி விமான நிலைய குழுமம் அறிவித்தது.
வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் முனையம் மீண்டும் திறக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேம்பாட்டு பணிகளுக்காகமே 2020 முதல் மூடப்பட்ட சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் T2 முனையத்தை மீண்டும் திறக்கப்பட உள்ளது. 2024 ம் ஆண்டு விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் போது, முனையத்தின் திறன் ஆண்டுக்கு 5 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 28 மில்லியன் என்ற அளவிற்கு உயரும் என்று கூறப்படுகிறது.
விரிவாக்கப்பட்ட T2 முனையம், அதிக தானியங்கு வசதிகள் மற்றும் சிறப்பு அம்சஙக்ளுடன் கூடிய பெரிய அளவிலான முனையமாக இருக்கும்.
தானியங்கி குடியேற்றப் பாதைகளை கொண்ட குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தில் தங்கள் கருவிழி மற்றும் முக பயோமெட்ரிக்ஸைப் பதிவு செய்ய வசதிகள் இருக்கும்.
உடமைகளை சேகரிக்கும் அரங்கில், மூன்று சேகரிப்பு பெல்ட்கள் இருக்கும் 2என்றும், அதில் ஒன்று அதிக பயணிகள் உடமைகள் கையாளும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சாங்கி விமான நிலைய குழுமம் CAG தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | சிங்கப்பூரில் வேலை, கை நிறைய சம்பளம்: ஏமாற்றிய நபர், பணத்தை பறிகொடுத்த அப்பாவிகள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR