NRI நினைவில் கொள்ளவேண்டிய இந்திய வருமான வரி விதிகள்

NRI: இந்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் பண வரம்பு விதிகளை திருத்திய பிறகு, குறிப்பிட்ட சில டெபாசிட்கள் மற்றும் வித்டிராயல்களுக்கு பான் அல்லது ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2022, 05:38 PM IST
  • இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
  • அறிக்கையின் அர்த்தம் என்ன, ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
  • இது வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) பரிவர்த்தனைகளுக்குப் பொருந்துமா?
NRI நினைவில் கொள்ளவேண்டிய இந்திய வருமான வரி விதிகள் title=

துபாய்: இந்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் பண வரம்பு விதிகளை திருத்திய பிறகு, குறிப்பிட்ட சில டெபாசிட்கள் மற்றும் வித்டிராயல்களுக்கு பான் அல்லது ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது. இது என்ஆர்ஐகளுக்குப் பொருந்துமா? இது தொடர்பாக இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. வங்கியில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்கக் கிரெடிட் கணக்கைத் தொடங்கும் போது, ​​ஒரு நிதியாண்டில் 2 மில்லியனுக்கு (Dh93,041) மேலே ரொக்க வைப்பு மற்றும் வித்டிராயல்களுக்கு அனைத்து இந்தியர்களும் பான் அல்லது ஆதார் அட்டையை அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

அறிக்கையின் அர்த்தம் என்ன, ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன? 

அறிவிப்பின்படி, 'ஒவ்வொரு நபரும், ஒரு பரிவர்த்தனையில் ஈடுபடும் போது, ​​அவரது நிரந்தர கணக்கு எண் (பான்) அல்லது ஆதார் எண்ணை மேற்கோள் காட்ட வேண்டும். மேலும் அத்தகைய ஆவணங்களைப் பெறும் ஒவ்வொரு நபரும், அந்த எண் முறையாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதா, அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.' 

இதன் பொருள் என்னவென்றால், இந்த அரசாங்க எச்சரிக்கைக்கு முன், இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு பான் எண் உள்ளதா என்பதை உங்கள் வங்கி உறுதிப்படுத்த வேண்டி இருந்தது.  ஆனால் இப்போது உங்கள் வங்கி பான் எண்ணை வங்கியின் பதிவுகளில் வைத்திருக்க வேண்டும் மற்றும் அத்தகைய நிதி பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் படிக்க | UAE: எந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா ஆன் அரைவல் கிடைக்கும்? பட்டியல் இதோ 

முன்னதாக, வருமான வரி விதிகளின்படி, ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் ரொக்க டெபாசிட் செய்யப்பட்டால் PAN கட்டாயமாகத் தேவைப்பட்டது. ஆனால் ரொக்க வைப்புத்தொகைக்கான வருடாந்திர மொத்த வரம்பு இதற்கு முன் வழங்கப்படவில்லை. பணம் எடுப்பதற்கு எந்த வரம்பும் இல்லை, அது இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒருவரிடம் பான் எண் இல்லை அல்லது அவர் அதை அளிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? அபராதம் போடப்படுமா?

ஒரு நிதியாண்டில், ஒரு வங்கிக்கணக்கிலோ அல்லது பல கணக்குகளிலோ ரூ.2 மில்லியன் அல்லது அதற்கும் அதிகமாகப் பணம் டெபாசிட் செய்யும் அல்லது பணம் எடுக்கும் நபர்கள் அனைவரும் பான் அட்டையை அளிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இல்லையெனில், அவர் அத்தகைய பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் பணம் செலுத்துவது அல்லது பெறுவதும் தவறுதான். இதற்கு செலுத்தப்பட்ட அல்லது பெறப்பட்ட தொகையில் 100 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

PAN இல்லாத நபர்கள், ஒரு நாளைக்கு ரூ.50,000 அல்லது ஒரு நிதியாண்டில் ரூ. 2 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செய்வதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்பாக PAN க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாற்றங்கள் ஏன் நடைமுறைக்கு வந்தன? மேலும் மாற்றங்கள் உள்ளதா?

வருமான வரித்துறை, மற்ற மத்திய அரசு துறைகளுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக நிதி மோசடி, சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் பிற பணக் குற்றங்களை குறைக்கும் வகையில் விதிகளை புதுப்பித்து, திருத்தம் செய்து வருகிறது.

விதிகள் மே 26 முதல் பொருந்தும் என்பதால், மே 26 க்கு முன்னர் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதா என்பதை அதிகாரிகள் எவ்வாறு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

இது வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) பரிவர்த்தனைகளுக்குப் பொருந்துமா?

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பான் அட்டை தேவைப்படலாம் என்றாலும், ஆதார் வைத்திருக்கும்  NRI-களுக்கு இந்த விதி பொருந்தாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆரம்பத்தில் வங்கிகளுக்குத் தேவையான பான் விவரங்களை ஏற்கனவே தங்கள் வங்கிக் கணக்கில் சேர்த்திருக்கும் என்ஆர்ஐகளை அதிகம் பாதிக்காது. இது வங்கிகள் பான் எண்ணை பதிவு செய்ய வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | கனடா மாணவர் விசா குறித்து பலரும் அறிந்திராத ‘ஒரு’ தகவல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News