அதானி குழுமத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை அன்று தொடர்ந்து மூன்றாவது அமர்வாக உயர்ந்தன. இதன் காரணமாக, இரண்டு நாட்களில் ஒரு என்ஆர்ஐ முதலீட்டாளர் சுமார் ரூ. 3000 கோடிகளை சம்பாதித்துள்ளார். அமெரிக்க ஷார்ட் விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் மோசமான அறிக்கையின் தாக்கம் காரணமாக குழுமத்தின் பங்குகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த பின்னடைவுக்கு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த வளர்ச்சி அதானி குழுமத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், நான்கு அதானி குழும பங்குகளில் ரூ. 15,446 கோடிக்கு ஒரு பிளாக் டீல் செய்து, ஒரு இன்வெஸ்ட்மெண்ட் பொட்டிக் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ராஜீவ் ஜெயின், GQG பார்ட்னர்ஸின் நிறுவனர் ஆவார். தற்போது அதன் தலைவராகவும், GQG உத்திகள் அனைத்திற்கும் போர்ட்ஃபோலியோ மேலாளராகவும் பணியாற்றுகிறார்.
வெளிநாடு வாழ் இந்தியரான ராஜீவ், இரண்டு நாட்களில் 20%க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளார். வியாழன் முதல் இவர் ரூ. 3,102 கோடி லாபம் ஈட்டியுள்ளார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவரது முதலீட்டின் மதிப்பு தற்போது ரூ. 18,548 கோடியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | NRI News: உலகின் ‘மிக புத்திசாலியான’ மாணவர்கள் பட்டியலில் இந்திய - அமெரிக்க மாணவி!
அதானி குழுமத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை, அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் (APSEZ), அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL), அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் (ATL) மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) ஆகியவற்றின் பங்குகள் இரண்டாம் நிலை சந்தைத் தொகுதி ஒப்பந்தங்கள் மூலம் விற்கப்பட்டதாக தெரிவிக்கின்றன.
"இந்த முதலீடு முக்கியமான இந்திய உள்கட்டமைப்பின் வளர்ச்சியில் GQG ஐ முக்கிய முதலீட்டாளராக மாற்றியுள்ளது" என்று குழு கூறியது. இந்த பெரிய ஒப்பந்தம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியதாகத் தெரிகிறது. கௌதம் அதானியின் முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் கடந்த ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 17% உயர்ந்தன. பிஎஸ்இ-இல் ரூ. 1,879.35 என்ற நிலையில் இது இருந்தது.
அதானி போர்ட்ஸ் பங்குகள் 9.81% உயர்ந்தன, அம்புஜா சிமெண்ட்ஸ் 5.70% மற்றும் ஏசிசி 5.11% முன்னேறின. அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டோட்டல் கேஸ் அனைத்தும் 5% லாபம் ஈட்டியுள்ளன.
இதனிடையே, வெள்ளிக்கிழமை சந்தை நிறைவின்போது, அதானி குழுமப் பங்குகளில் எல்ஐசியின் பங்கு மதிப்பு சுமார் ரூ. 9,000 கோடி உயர்ந்துள்ளது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களில் ஏழு நிறுவன பங்குகளை அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் வைத்திருக்கிறது. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்டில் 1.28%, அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ லிமிடெட் ஆகியவற்றில் 9.14% பங்குகள் என அதானி குழுமத்தில் எல்ஐசி-யின் பங்கு வரம்பு உள்ளது.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியா: லட்சுமி நாராயண் கோவில் மீது தாக்குதல், தொடரும் அநியாயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ