வெளிநாட்டு வேலை என்பது பலரது கனவாக உள்ள ஒரு விஷயம். வெளிநாட்டில் வேலை, கை நிறைய சம்பளம், நிம்மதியான வாழ்க்கை.... இப்படி வெளிநாட்டு வேலையின் கனவோடு காத்திருக்கும் ஏராளமானோர் நம் நாட்டில் உள்ளனர்.
உள்ளூரில் போதுமான சம்பளத்தில் வேலை கிடைக்காதபோது, வெளிநாட்டுக்கு சென்று அதிக சம்பளத்தில் வேலை செய்து குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவலிலும், மேன்மையான வாழ்க்கையின் கனவோடும் பலர் வெளிநாட்டுக்கு பணிகளுக்காக காத்திருப்பது உண்டு. வெளிநாட்டில் வேலை தேட நினைக்கும் பலரது பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடாக இருப்பது சிங்கப்பூர்.
எனினும், எந்த நாடாக இருந்தாலும் ஊதியம் அதிகமாக இருந்தால், கவலை இல்லை. குறைந்த ஊதியத்தில் வேலைக்கு செல்பவர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. குறிப்பாக, சிங்கப்பூரில், வெளிநாடுகளிலிருந்து வேலைகளுக்காக செல்லும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சில முக்கிய பிரச்சனைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
- ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யும் நாட்டின் சட்ட திட்டங்களை பற்றி அறியாமல், சில சமயம் சில விவகாரங்களில் மாட்டிக்கொள்கிறார்கள்.
- ஊழியர்கள் தங்களுக்கான சில பணிகளுக்காக, தங்களுக்கு சாதகமாக வேலைகள் நடக்க, முதலாளிகளுக்கு சட்டவிரோதமாக பணம்/பொருள் கொடுக்கிறார்கள். இது பெரிய குற்றமாகும்.
- சிங்கப்பூரில் கடுமையாக கோவிட் கட்டுப்பாடுகள் உள்ளன. சில நேரம் அவற்றை சரியாக புரிந்துகொள்ளாததால் பிரச்சனைகள் வருகின்றன.
- கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக சில வெளிநாட்டு பணியாளர்கள் நீண்ட காலத்துக்கு விடுதிகளில் அடைந்து கிடப்பதால், அவர்களின் உடல் நலனுக்கும் மன நலகுன்னும் அது ஆபத்தாகலாம்.
- குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் பணியாளர்கள் பல சமயங்களில் பெரும் மன சோர்வுக்கு ஆளாகிறார்கள்.
- சில சமயங்களில் வாங்கும் ஊதியம் குறைவாக இருப்பதால், சொந்த நாட்டில் உள்ள குடும்பத்துக்கு பணம் அனுப்ப, கடன்களை வாங்கி பலர் மாட்டிக்கொள்வதும் உண்டு.
சிங்கப்பூரில் இப்படிப்பட்ட பல பிரச்சனைகளை வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்கொள்கிறார்கள். இவற்றுக்கு தீர்வு காண சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. முதலாளிகள் மெற்கொள்ளும் சட்டவிரோத செயல்களை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும். இப்படிபப்பட்ட செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு ஊழியர்களை நியாயமற்ற முறையில் நடத்தி, விதிகளுக்கு மாறாக வேலை வாங்கும் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளிடம் இருந்து ஊழியர்களை அரசு காக்க வேண்டும். இவர்கள் இலகுவாக வேறு நிறுவனத்துக்கு மாற அனுமதிக்கும் நிரந்தரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஊழியர்கள் அதிகபட்சமாக வேலை பார்க்கும் நேரமும் வரையறுத்து கட்டாயமாக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே வீட்டை விட்டு பிரிந்திருக்கும் ஊழியர்கள் விடுதிகளில் அடைந்திருக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல. ஆகையால், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்களை வழக்கம் போல இயல்பாக இருக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
பல வெளிநாட்டவர்களால் சிங்கப்பூர் ஒரு சொர்க்க பூமியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மாற்றங்களை செய்து, வெளிநாடுகளிலிருந்து வரும் பணியாளர்கள் நலன் காக்கப்பட்டால், அது சிங்கப்பூரின் பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கும் என்றால் அது மிகையாகாது.
மேலும் படிக்க | சீனர்களை மிஞ்சிய இந்தியர்கள்: சிங்கப்பூரில் இந்திய பயணிகள் நிகழ்த்திய புதிய சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR