UAE: திர்ஹமிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை உற்று நோக்கும் NRI

ஒரு கட்டத்தில் திர்ஹாமுக்கு  எதிரான ரூபாயின் மதிப்பு, 21.44 ரூபாய் என்ற அளவை தொட்டது. பின்னர்,  21.53 ஆக சரிந்து இப்போது 21.62 ஆக உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 4, 2022, 03:39 PM IST
  • திர்ஹாமுக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 21.44 ரூபாய் என்ற அளவை தொட்டது.
  • பின்னர், 21.53 ஆக சரிந்து இப்போது 21.62 ஆக உள்ளது.
  • கடந்த மாதம் இந்திய நாணயம் திர்ஹாமிற்கு 21.79 என்ற மிகக் குறைந்த அளவில் இருந்தது.
UAE: திர்ஹமிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை உற்று நோக்கும் NRI title=

துபாய்: திர்ஹம்மிற்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஏற்றத் தாழ்வுகளை சந்துத்து வரும் நிலையில், வெள்ளியன்று (ஆகஸ்ட் 4) நடைபெறவுள்ள மத்திய வங்கிக் கூட்டத்திற்கு முன்னதாக இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது சரிந்தது. மேலும் 0.35-0.50 சதவிகிதம் வட்டி விகித உயர்வு. ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ள இந்திய வெளிநாட்டவர்கள், இதனை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். பண பரிவர்த்தனையை சிறிது ஒத்தி போட்டுள்ளனர். 

நேற்று ஒரு கட்டத்தில் திர்ஹாமுக்கு  எதிரான ரூபாயின் மதிப்பு, 21.44 ரூபாய் என்ற அளவை தொட்டது. பின்னர்,  21.53 ஆக சரிந்து இப்போது 21.62 ஆக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில்  கடந்த மாதம் தான் இந்திய நாணயம் திர்ஹாமிற்கு 21.79 என்ற மிகக் குறைந்த அளவில் இருந்தது.

"கடந்த 48 மணிநேரங்களில் ரூபாய் மதிப்பில் மாற்றங்கள் காணப்படுகின்றன. மேலும் சமீபத்திய சரிவை டாலருக்கு எதிராக யூரோ, பவுண்ட் போன்றவற்றின் சரிவின் பின்னணியில் பார்க்க வேண்டும்" என்று ஒரு அன்னிய செலாவணி ஆய்வாளர் கூறினார். "நாளைய ரிசர்வ் வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) கூட்டம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு ஆகியவை ரூபாயின் குறுகிய கால வாய்ப்புகளுக்கான போக்கை நிர்ணியிக்கும். மொத்தத்தில், மத்திய வங்கி 79/$ அல்லது 21 (அல்லது 21/Dh க்கு மேல்) ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை என்பதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

ரிசர்வ் வங்கி ஏப்ரல் முதல் வட்டி விகிதங்களை 1.30 சதவீதம் உயர்த்தியுள்ளது, இரண்டு முறையும், ரூபாய் சற்று தள்ளாட்டத்தை சந்தித்தது. 

மேலும் படிக்க | UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகம்; அரசு வெளியிட்டுள்ள தகவல்

ரூபாயில் மதிப்பில் ஏற்ற இறக்கம் காணப்படும் நிலையில், பணம் அனுப்பும் அளவு குறைந்துள்ளது. ஆனால் இப்போதைய வீழ்ச்சியால், விஷயங்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தொழில்துறை வட்டாரங்கள் நம்புகின்றன. "இந்திய வெளிநாட்டவர்கள் ரூபாயின் மதிப்பு 21 க்கு மேல் இருந்தால் நல்லது என நினைக்கின்றனர். ஆனால் செவ்வாய் கிழமை வலுவடைவது கூர்மையாக இருந்தது, அது தயக்கத்திற்கு வழிவகுத்தது" என்று LuLu Exchange இன் செய்தித் தொடர்பாளர் கூறினார். 21.50 பிளஸ் என்னும் மதிப்பு நிலைகளில், சந்தையில் பணம் அனுப்பும் விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்" என்றார்.

மேலும் படிக்க | இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சவூதி அரேபியா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News