சீனாவில் மருத்துவம் படிக்கத் திட்டமா... இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!

சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விரிவான ஆலோசனையை இந்தியா வெளியிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2022, 06:05 PM IST
  • சீன மருத்துவக் கல்லூரிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதிய மாணவர்களை சேர்க்கத் தொடங்கின.
  • இந்திய மாணவர்கள் பல்வேறு சீனப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.
  • நேரடி விமானங்கள் இல்லாததால், எளிதில் போக முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
சீனாவில் மருத்துவம் படிக்கத் திட்டமா...  இந்த செய்தி உங்களுக்குத் தான்..!! title=

சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விரிவான ஆலோசனையை இந்தியா வெளியிட்டுள்ளது. மோசமான தேர்ச்சி சதவீதம், அதிகாரப்பூர்வ பேச்சு மொழியான புடோங்குவாவை கட்டாயமாக கற்றல் மற்றும் இந்தியாவில் பயிற்சிக்கு தகுதி பெறுவதற்கான கடுமையான விதிமுறைகள் உள்ளிட்ட இடர்பாடுகள் குறித்து  அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கின் கோவிட் விசா தடை காரணமாக, சீன மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டது. தற்போது 23,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பல்வேறு சீனப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலோர் மருத்துவ மாணவர்கள் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவிட் விசா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, சீனா சமீபத்தில், மாணவர்களுக்குத் திரும்புவதற்கு விசா வழங்கும் நடவடிக்கையை தொடங்கியது. இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் நேரடி விமானங்கள் இல்லாததால், எளிதில் போக முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இதற்கிடையில்,  சீன மருத்துவக் கல்லூரிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதிய மாணவர்களை சேர்க்கத் தொடங்கின. இந்தப் பின்னணியில், சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் விரிவான ஆலோசனையை வியாழக்கிழமை வெளியிட்டது.

மேலும் படிக்க | கனடா மாணவர் விசா குறித்து பலரும் அறிந்திராத ‘ஒரு’ தகவல்!

சீனாவில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் இந்தியாவில் மருத்துவப் பயிற்சி பெறுவதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான விதிமுறைகளை கோடிட்டுக் காட்டிய ஆய்வுகளின் முடிவுகள் ஆகியவை ந்இந்த ஆலோசனை அறிக்கையில் உள்ளன.

இந்த ஆலோசனையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 2015 மற்றும் 2021 க்கு இடையில் இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கான  தேர்வை எழுதிய மாணவர்களில், 16 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 2015 முதல் 2021 வரை இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்சிஐ) எஃப்எம்ஜி (வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி) தேர்வில் பங்கேற்ற 40,417 மாணவர்களில் 6,387 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அங்கீகாரம் பெற்ற 45 பல்கலைக்கழகங்களில் அந்த காலகட்டத்தில் சீனாவில் மருத்துவ மருத்துவ படிப்புகளை படித்த இந்திய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 16 சதவீதம் மட்டுமே.

மருத்துவ படிப்பிற்கான செலவுகளை பொறுத்தவரை, வெவ்வேறு பல்கலைக்கழகங்களுக்கு கட்டண அமைப்பு வேறுபட்டது என்றும், மாணவர் சேர்க்கைக்கு முன் பல்கலைக்கழகத்தில் இருந்து நேரடியாகச் சரிபார்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியது.

ஐந்தாண்டு கால அவகாசம் மற்றும் ஒரு வருட இன்டர்ன்ஷிப்பில் மருத்துவப் பட்டங்களை வழங்க சீன அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 45 மருத்துவக் கல்லூரிகளின் விபரங்கள், அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது. இந்திய மாணவர்கள் அந்த 45 கல்லூரிகளைத் தவிர வேறு கல்லூரிகளின் சேர்க்கை பெற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சீனாவில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் தாங்கள் பட்டம் பெற்ற நாட்டிலேயே பயிற்சி பெற உரிமம் பெற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க |  NRI News: கனடா நாட்டின் திறமைக்கான ஆதாரமாக மாறி வரும் இந்தியா!

மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News