தமிழகம் ஊடுருவ முயலும் முன்னாள் விடுதலைப்புலிகள்: வெளியான உளவு தகவல்

தமிழ்நாட்டின் கரையோரங்களுக்கு வரும் இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்பாமல் அகதிகள் முகாம்களில் வைக்க தமிழக அரசு  முடிவெடுத்துள்ளது.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 29, 2022, 08:34 PM IST
  • தமிழ்நாட்டின் கரையோரங்களுக்கு வரும் இலங்கைத் தமிழர்கள்.
  • சிறைக்கு அனுப்பாமல் அகதிகள் முகாம்களில் வைக்க தமிழக அரசு முடிவு.
  • தமிழ் விடுதலை புலி அமைப்பில் இருந்து தப்பிய சிலர் தமிழகம் வரக் கூடும் என தகவல்.
தமிழகம் ஊடுருவ முயலும் முன்னாள் விடுதலைப்புலிகள்: வெளியான உளவு தகவல்  title=

இலங்கை நிதி நிலைமை மோசமடைந்ததையடுத்து, இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில் இந்தியக் கரைக்கு வருவார்கள் என்ற உளவுத்துறை அளித்த தகவலையடுத்து, தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் தமிழக கடலோர காவல்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அகதிகள் என்ற போர்வையில், முன்னாள் விடுதலை புலிகளும் ஊடுருவக் கூடும் என உளவுத் தகவல் தெரிவிப்பதாக கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் கரையோரங்களுக்கு வரும் இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்பாமல் அகதிகள் முகாம்களில் வைக்க தமிழக அரசு  முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், தற்போது செயலிழந்த பயங்கரவாத அமைப்பான தமிழ் விடுதலை புலி அமைப்பில் இருந்து தப்பிய சிலர் தமிழகம் வரக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படகு நடத்துநர்கள் அகதிகளை சட்டவிரோதமாக இந்தியக் கரைக்கு அழைத்துச் வருவதும், அவர்களை நடுவே கரைக்கு அருகில் இறக்கிவிட்டு அவர்கள் தப்பித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போலீஸார் கண்காணிப்பை அதிகரித்து வருகின்றனர். அகதிகள் தனுஷ்கோடி கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு பெரும்பாலும் மார்பு உயரமான நீரில் நடந்து செல்ல வேண்டும்.

மேலும் படிக்க | இந்தியா தந்தது தானம் இல்லை; கடன் உதவி: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 

திங்கள்கிழமை, தனுஷ்கோடி கொத்தநாதமாரர் கோயில் அருகே மயங்கிக் கிடந்த இலங்கையின் மன்னார் பகுதியைச் சேர்ந்த முதியவர் சிவன் (81) மற்றும் திருச்சியைச் சேர்ந்த பரமேஸ்வரி (71) ஆகியோரை கடலோரக் காவல் துறையினர் மீட்டனர். இருவரையும் மீட்பதற்காக இந்திய கடலோர காவல்படை ஹோவர் கிராஃப்ட் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

உண்மையான அகதிகளான இலங்கைத் தமிழர்கள் பலர், தீவு தேசத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சட்டவிரோத படகு நடத்துனர்களுக்கு பெருமளவு பணத்தைச் செலுத்தி கரையை அடைந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. 

இந்த சட்டவிரோத படகு ஆபரேட்டர்கள், பெரும்பாலும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்களுக்கு சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) கடப்பதற்குத் தேவையான உரிமம் இல்லை.  எனவே இந்த அகதிகளை நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் சிறிய மண் மேடுகளில் இறக்கிவிடுகிறார்கள். இந்த அகதிகளை தமிழக ரோந்து குழுவினரோ, மீனவர்களோ கண்டு கொள்ளாவிட்டால், நிலைமை மேலும் மோசமாகும்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 90க்கும் மேற்பட்டோர் இந்தியக் கரையை அடைந்து, மண்டபத்தில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கைத் தமிழ் அகதிகள் விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றன.

தமிழ்நாடு கடலோர காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், காவல்துறை ரோந்து குழுக்கள் கடலில் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன, ஆனால் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியக் கரையை அடைய முயற்சிப்பதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன என்றார். 

மேலும் படிக்க | இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News