இதையெல்லாம் செய்யக்கூடாது: முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சவூதி அரேபியா

சவூதியின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. ஆகையால், அங்கு பணிக்கு செல்லும் பணியாளர்கள் அனைத்து வித சட்டங்களையும் தெரிந்துகொள்வது மிக நல்லதாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 3, 2022, 03:18 PM IST
  • ஊழியர் நலனுக்கான ஒரு அறிவிப்பு சமீபத்தில் சவூதி அரேபியாவில் வெளியிடப்பட்டது.
  • ஒரு முதலாளி தனது பணியாளரை மற்றவர்களுக்கு வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது.
  • மேலும் ஒரு தொழிலாளி மற்ற முதலாளிகளுக்கு வேலை செய்யக்கூடாது.
இதையெல்லாம் செய்யக்கூடாது: முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சவூதி அரேபியா title=

ரியாத்: ஊழியர் நலனுக்கான ஒரு அறிவிப்பு சமீபத்தில் சவூதி அரேபியாவில் வெளியிடப்பட்டது. ஊழியர்களை மற்றவர்களுக்காக அல்லது தொழிலாளர்களின் சொந்த நலனுக்காக வேலை செய்ய அனுமதிக்கும் முதலாளிகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி அரேபியா (கெஎஸ்எ) எச்சரித்துள்ளது.

சவூதியின் பொதுப் பாதுகாப்பின் படி, இந்த குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் விதிகளை மீறியதற்காக 100,000 சவுதி ரியால்கள் (SR) அபராதம் விதிக்கப்படும். இது தவிர ஐந்தாண்டுகள் வரை ஆட்சேர்ப்பு தடையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சவூதி தொழிலாளர் சட்டம் எண் 219 இன் பிரிவு 39 இன் கீழ், ஒரு முதலாளி தனது பணியாளரை மற்றவர்களுக்கு வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது. மேலும் ஒரு தொழிலாளி மற்ற முதலாளிகளுக்கு வேலை செய்யக்கூடாது. 

மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை 

அதேபோல், பிறரால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களை முதலாளி வேலைக்கு அமர்த்தக் கூடாது. முதலாளி தனது ஊழியர் தனது சொந்த நலனுக்காக செயல்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மக்கா மற்றும் ரியாத் பிராந்தியங்களில் 911 என்ற எண் மூலமாகவும், ராஜ்ஜியத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் 999 மூலமாகவும் குடியிருப்பு, பணி மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிகள் மீறப்படும் பட்சத்தில் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பொதுப் பாதுகாப்பு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வெளிநாட்டில் வேலை, கை நிறைய சம்பளம், நிம்மதியான வாழ்க்கை, இப்படி வெளிநாட்டு வேலையின் கனவோடு காத்திருக்கும் ஏராளமானோர் நம் நாட்டில் உள்ளனர். 

உள்ளூரில் போதுமான சம்பளத்தில் வேலை கிடைக்காதபோது, வெளிநாட்டுக்கு சென்று அதிக சம்பளத்தில் வேலை செய்து குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவலிலும், மேன்மையான வாழ்க்கையின் கனவோடும் பலர் வெளிநாட்டுக்கு பணிகளுக்காக காத்திருப்பது உண்டு. 

சவூதி அரேபியாவிலும் வெளிநாடுகளிலிருந்து பலர் வேலை செய்து வருகின்றனர். நல்ல சம்பளம் கிடைக்கும் ஆசையில் தமிழகத்திலிருந்தும் பலர் அங்கு பணியில் உள்ளனர். பணியாளர் நலனுக்காக சவூதியில் பல நலத்திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.

சவூதியின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. ஆகையால், அங்கு பணிக்கு செல்லும் பணியாளர்கள் அனைத்து வித சட்டங்களையும் தெரிந்துகொள்வது மிக நல்லதாகும். தற்போது சவூதி அரேபிய நிர்வாகம் விடுத்துள்ள எச்சரிக்கையும் பணியாளர் நலனுக்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்பதில் சந்தேகமில்லை. 

மேலும் படிக்க | UAE Monkeypox Update: 4 பேர் புதிதாக குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டனர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News