NRI Judge In USA: நியூயார்க்கில் மாவட்ட நீதிபதியாகிறார் தமிழர் அருண் சுப்பிரமணியன்

Arun Subramanian Judge of Manhattan: இந்திய-அமெரிக்கரான அருண் சுப்ரமணியன் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாகிறார் என்பது இன்று உறுதியானது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 8, 2023, 10:15 PM IST
  • நியூயார்க் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழர்
  • என்.ஆர்.ஐ வழக்கறிஞர் அருண் சுப்ரமணியன்
  • நியூயார்க்கில் தெற்காசியாவை சேர்ந்த முதல் மாவட்ட நீதிபதி
NRI Judge In USA: நியூயார்க்கில் மாவட்ட நீதிபதியாகிறார் தமிழர் அருண் சுப்பிரமணியன் title=

இந்திய-அமெரிக்கரான அருண் சுப்ரமணியன் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாகிறார் என்பதை, அமெரிக்க செனட் உறுதி செய்தது. இந்திய-அமெரிக்கரான அருண் சுப்ரமணியன் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாக பதவி வகிப்பார். இதன் மூலம் இந்தப் பதவியை வகிக்கும் முதல் தெற்காசியர் என்ற பெருமையை அருண் சுப்ரமணியன் பெறுகிறார்.

இன்று (மார்ச் 8) செவ்வாய்கிழமை மாலை 58-37 வாக்குகள் வித்தியாசத்தில் சுப்பிரமணியன் நியமனத்தை அமெரிக்க செனட் உறுதி செய்தது. யார் இந்த அருண் சுப்பிரமணியன்?

1979ம் ஆண்டியில் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் பிறந்த அருண் சுப்பிரமணியத்தின் பெற்றோர், 1970 களின் முற்பகுதியில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். அவரது தந்தை பல நிறுவனங்களில் கட்டுப்பாட்டு அமைப்புகள் பொறியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | NRI: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?
   
நியூயார்க் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆன முதல் இந்திய-அமெரிக்கரான அருண் சுப்ரமணியன்

நீதிபதி அருண் சுப்ரமணியன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

  • சுப்பிரமணியன் 1979 இல் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் பிறந்தார். அவரது பெற்றோர் 1970 களின் முற்பகுதியில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.
  • அவரது தந்தை பல நிறுவனங்களில் கட்டுப்பாட்டு அமைப்புகள் பொறியாளராக பணியாற்றினார்; அவரது தாயார் புத்தகக் காப்பாளர் உட்பட பல வேலைகளில் பணியாற்றினார்.
  • அமெரிக்க வாழ் தமிழரான அருண் சுப்பிரமணியன் 2004 இல் கொலம்பியா சட்டப் பள்ளியில் தனது Juris Doctor (J.D) பட்டத்தைப் பெற்றார். 2001 இல் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
  • மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கொலம்பியா சட்டப் பள்ளியில் ஜேம்ஸ் கென்ட் & ஹார்லன் ஃபிஸ்கே ஸ்டோன் அறிஞராக சட்டப் பட்டம் பெற்றார். கொலம்பியா லா ரிவியூவின் நிர்வாக கட்டுரை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • தற்போது நியூயார்க்கில் உள்ள Susman Godfrey LLP இல் பங்குதாரராக உள்ளார், அங்கு 2007 முதல் பணியாற்றி வரும் அருண் சுப்ரமணியன் 2006 முதல் 2007 வரை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க்கின் சட்ட எழுத்தராக பணியாற்றினார்.
  • உறுதியான நுகர்வோர் பாதுகாப்பு நிபுணரான அவர், கடத்தல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக வாதிடுபவர்.
  • நீதிமன்றத்திற்கு வெளியே வழக்குகளை தீர்த்து வைபப்தன் மூலம் அருண் சுப்பிரமணியன் நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறப்பாக பங்களிப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது சுற்றுக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கான சார்பு குழுவில் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க | டாலர் கனவு படுத்தும் பாடு! அமெரிக்க சட்ட விரோதமாக நுழைய முயன்ற இரு NRI கைது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

dog walk

Trending News