சமீபத்தில் நேபாள பிரதமராக பதவியேற்ற கே.பி.சர்மா ஒலி இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். அவரது மனைவி ராதிகா சகாய ஒலியும் அவருடன் வருகிறார்.
இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளது..!
நேபாள பிரதமர் ஒலி ஏப்ரல் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அப்போது அவர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இந்தியா வரும் அவர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், நேபாள மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து, சனிக்கிழமை குடியரசு தலைவர் மாளிகையில் ஒலிக்கு வரவேற்பு அளிக்கப்படும். அங்கு அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்.வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.