முதல் போட்டியில் ஜெயித்த அமுதா.. ரூ 100 கொடுத்து பாட்டி வைக்கும் அடுத்த போட்டி

Amudhavum Annalakshmiyum July 19 Update: முதல் போட்டியில் ஜெயித்த அமுதா.. ரூ 100 கொடுத்து பாட்டி வைக்கும் அடுத்த போட்டி - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2023, 12:44 PM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
முதல் போட்டியில் ஜெயித்த அமுதா.. ரூ 100 கொடுத்து பாட்டி வைக்கும் அடுத்த போட்டி title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் பாட்டி வேதநாயகி அமுதா மற்றும் அன்னத்திற்கு முதல் போட்டியாக கோல போட்டியை சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | Kamal Haasan: அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்..! எதற்காக தெரியுமா..?

அதாவது, கோலப் போட்டிக்காக அன்னம் அரிசி மாவு ரெடி செய்யப் போக பரமு என்னம்மா நீ எல்லாரும் கலர் கலரா கோலம் போடுறாங்க, நீ போய் அரிசி மாவை ரெடி பண்ணிகிட்டிருக்க, கலர் பொடி வாங்கலாம் என சொல்லிவிட்டு கலர் பொடி வாங்கி வர பாட்டி அதை பார்த்து விட்டு திட்டுகிறார்.

பரமு தானும் போட்டியில் கலந்து கொள்கிறேன் என சொல்லிவிட்டு கோல ஸ்டிக்கரை எடுக்க பாட்டி அவளை மண்டையில் கொட்டுகிறார். அடுத்து அமுதாவிடம் பாட்டி நீ எதுல கோலம் போடப் போற என கேக்க, தான் அரிசி மாவில் கோலம் போடப் போவதாக சொல்கிறாள்.

பாட்டி செந்திலிடம் கோலப் பொடியை குடுத்து புள்ளி வைக்க சொல்லி அந்த புள்ளியில் இருவரையும் கோலம் போடச் சொல்கிறார். அன்னலட்சுமி நாலு புள்ளியை விட்டு கோலம் போட அமுதா அதிகமாக உள்ள நாலு புள்ளியில் விளக்கு கோலம் போடுகிறாள். இதனால் பாட்டி அமுதாவை பாராட்டுகிறார்.

இந்த போட்டியில் அமுதா ஜெயித்ததும் பாட்டி அடுத்த போட்டியை பற்றி சொல்கிறார். அதாவது ஆளுக்கு 100 ரூபாய் கொடுத்து சிக்கனமாவும், ருசியாவும் சமைக்கனும், யாரு சமைக்கறீங்கனு பார்க்கலாம் என்று சமையல் போட்டியை அறிவிக்கிறார். 

அடுத்ததாக இருவரும் சமைக்க ஆரம்பிக்க பரமு தானும் போட்டியில் கலந்து கொள்ளப் போவதாக சொல்ல பாட்டி 100 ரூபாய் கொடுக்கிறார். பணத்தை வாங்கிய பரமு பிரியாணி வாங்கி வந்து பாட்டியிடம் குடுக்க, பாட்டி அவளை அடி வெளுத்து எடுக்கிறார். கடைசியில் இருவரும் இருவரும் சமைத்து முடிக்க பாட்டி அன்னலட்சுமி சாப்பாட்டை சாப்பிட அவர் பயத்துடன் பார்க்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | பாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி..! விஜய் படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்கிறார்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News