சினிமாவை விட, தொலைக்காட்சி சீரியல்களை அனைவரும் விரும்பி பார்க்கும் கால்ம் இது. வீட்டில் வேலை பார்த்துக் கொண்டே சீரியலை பார்க்கலாம் என்பதும், பணம் குறைவாக செலவழித்தாலே போதும் என்பதாலும், பெண்களிடையே பிரபலமாகி விட்ட சீரியல்கள், தற்போது, அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்காக மாறிவிட்டது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.
அண்ணா சீரியல் நேற்றைய எபிசோட்
நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகத்தை கூப்பிட்டு வைத்து மறைமுகமாக அவமானபடுத்திய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக இன்றைய சீரியலின் அப்டேட்.
மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: மாப்பிள்ளையாக மாறும் ஷண்முகம்! கல்யாணம் இப்போ தேவையா? கேள்வி
இன்றைய எபிசோட்
ஷண்முகம் தனது அம்மாவாக நினைக்கும் மரத்தின் அருகே சென்று கோபப்பட்ட நிலையில் மறுநாள் காலையில் எதுவும் நடக்காதது போல குளித்து முடித்து கந்தசஷ்டி கவசம் பாடி தங்கைகளுக்கு ஆரத்தி கொடுக்க வழக்கம் போல எல்லாரையும் ஸ்கூல், காலேஜ்க்கு ரெடியா என பேச தங்கைகள் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி சண்முகத்துக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல்ல ஷண்முகம் இதோ வரேன் மாமா என்று வீட்டுக்கு ஓட சௌந்தரபாண்டி என்னாலே கோபமா? சொல்லாமல் கொள்ளாம போய்ட்ட, தங்கச்சிகளும் ஒன்னும் சொல்லல என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா, அப்பா விழுந்து கிடக்கிறதா வெட்டுக்கிளி போன் பண்ணான் என்று சொல்லி சமாளிக்கிறான்.
பிறகு சௌந்தரபாண்டி முத்துபாண்டியை நம்ப முடியாது. நீ தான் உங்க அத்தை கூட இருந்து பரணி கல்யாண வேலைகள் எல்லாத்தையும் பார்க்கணும் என்று சொல்ல பரணியை பார்த்து விட்டு ஷண்முகம் சரிங்க மாமா என்று சொல்கிறான்.
பிறகு பாக்கியம் அப்பாவுக்கு என்னாச்சு என பதற்றத்தோடு கேட்க ஷண்முகம் வழக்கம் போல தான் என்று சொல்லி கிளம்ப காபி குடிச்சி ட்டு போக சொல்லி உட்கார வைக்கிறாள்.
இந்த நேரம் பரணி ஷண்முகத்திடன் என் மேல கோபமா என்று கேட்க முகத்தை பார்க்காமல் அவன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்ல பரணி அப்படினா கோபம் தான் என்று சொல்கிறாள். பிறகு பாக்கியம் வந்து ஏன் டா முகம் டல்லா இருக்கு என்று கேட்க பரணி என்னை சண்முகத்துக்கு குடுக்கறதா நினைத்து வந்தானாம் என்று சொல்ல அப்படியெல்லாம் இல்ல அத்தை என்று சொல்லி ஷண்முகம் கிளம்புகிறான்.
மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி
மறுபக்கம் சிவபாலன் இசக்கியை பார்க்க வர அவள் உன்னால் என் அண்ணா ஏமார்ந்து போய்டுச்சு என அவனிடம் கோபப்பட்டு அவனை விரட்டி விடுகிறாள். இதனையடுத்து வெங்கடேஷ் வழியில் ரத்னாவிடம் பேச முயற்சி செய்கிறார்.
முத்துப்பாண்டி அவன் தான் ரத்னாவுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை என தெரிந்தும் தெரியாதது போல வந்து என் மாமா பொண்ணு கிட்டயே ஈப்டீசிங் பண்றயா என அவனை அடித்து சட்டை பேண்டை கழட்டி நடுரோட்டில் உட்கார வைக்கிறான்.
அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். இந்த பரபரப்பான சீரியல், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் படிக்க | மாப்பிள்ளைக்கு காபி கொடும்மா! கிண்டல் செய்யும் செளந்தரபாண்டி! கண்கலங்கும் ஷண்முகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ