ரெட் கார்ப்பெட்டில் மகன்கள் - தனுஷ் சொல்வது என்ன?

‘தி கிரே மேன்’ படத்தின் சிறப்புக் காட்சியில் மகன்களுடன் கலந்துகொண்டது தொடர்பாக தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 14, 2022, 05:04 PM IST
  • தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்திருக்கிறார்
  • இப்படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது
ரெட் கார்ப்பெட்டில் மகன்கள் - தனுஷ் சொல்வது என்ன? title=

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி பல கிண்டல்களை சந்தித்து தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக திகழ்கிறார் தனுஷ். தனது திறமையால் பாலிவுட் சென்ற தனுஷ் தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார்.

அந்தவகையில், கேப்டன் அமெரிக்கா வரிசையிலும், அவெஞ்சர்ஸ் பட வரிசையிலும் இரண்டு படங்களை இயக்கிய ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ ஆகியோர்களின் இயக்கத்தில் ‘தி கிரே மேன்’ என்ற படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகளவு எழுந்திருக்கிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் ஜூலை 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. இதில் ரையான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | ஆண்டவரின் அசாத்திய சம்பவம் ‘ஆளவந்தான்’ பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய 10 விஷயங்கள்!

இந்நிலையில் ’தி கிரே மேன்’ படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் இன்று திரையிடப்பட்டது. இந்தக் காட்சியில் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மாற்றும் லிங்காவுடன் கலந்துகொண்டார்.  மூவரும் கோட், சூட்டில் இருக்கும் புகைப்படமும், ரெட் கார்ப்பெட்டில் வரும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)

இதுகுறித்து தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் முழுமையாக ஷோவை கைப்பற்றிவிட்டார்கள்” என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News