பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்ததன் பின்னணி!

பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே மிக கடினமாக உழைத்துள்ளார் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2022, 05:48 PM IST
  • தற்போது படத்தில் புரமோஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
  • படத்திற்கு பல இடங்களில் டிக்கெட் கிடைக்கவில்லை.
பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்ததன் பின்னணி! title=

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் பணிகள் நிறைவடைந்து தற்போது படத்தில் புரமோஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அன்குர் அஜித் விக்கல், அபர்ணா தாஸ், யோகி பாபு போன்ற பலர் நடித்துள்ளனர்.  அனிருத், நெல்சன் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடினார்.

மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!

அதனைத்தொடர்ந்து 'பீஸ்ட்' படத்தின் இயக்குனரும், கதையாசிரியருமான நெல்சன், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவை ஏன் தேர்வு செய்தார் என்பது குறித்த தகவலை கூறியுள்ளார்.  அவர் கூறுகையில், நடிகை பூஜா ஹெக்டேக்கு கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகுவது மட்டுமல்லாமல் அவர் இப்படத்திற்கு பொருத்தமாக இருந்தார், அதோடு படக்குழுவினருடன் நன்கு இணங்கி செயல்பட்டார்.  'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியை தேர்வு செய்யும் சமயத்தில் 'அலா வைகுந்தபுரமலோ' படம் வெளியானது.  இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பு சிறப்பாக அமைந்ததோடு, பலரது இதயங்களையும் அவர் கவர்ந்தார்.  இதுவரை விஜயுடன் இணைந்து பணியாற்றாத புது கதாநாயகியை தான் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யவேண்டும் என நினைத்த எனக்கு பூஜா ஹெக்டே சிறந்த தேர்வாக அமைந்தார், அதனால் அவரை ஒப்பந்தம் செய்தேன் என்று கூறினார்.

மேலும் அவர் பூஜா குறித்து கூறுகையில், நடிகை பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்திற்காக கடினமாக உழைத்தார், இவருக்கு தமிழ் சரளமாக வராது, இருப்பினும் அவர் இப்படத்திற்காக தமிழ் மொழியை கற்றுக்கொண்டு பேசினார் என்று தெரிவித்தார்.  இப்படத்திலிருந்து ஏற்கனவே 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் நேற்றைய தினம் வெளியான பீஸ்ட் மோட் எனும் இப்படத்தின் மூன்றாவது பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF:  ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News