தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சில படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்தவர் விஜே கல்யாணி. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
விஜே கல்யாணி:
2001 ஆம் ஆண்டு வெளியான ‘அள்ளித்தந்த வானம்’ படத்தில் அறிமுகமாகி இருந்தவர், விஜே கல்யாணி. இந்த படத்தை அடுத்து விஜயகாந்துடன் ரமணா படத்தில் நடித்தார். இவரது முகம் ‘ஜெயம்’ மூலம் பலருக்கும் பரீச்சியமானதாக மாறியது. இதையடுத்து சினிமா நட்சத்திரமாகவே வளர்ண்டஹ் இவர், சின்னத்திரையிலும் நடிக்க தொடங்கினார். இவரது நடிப்பில் வெளியான பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்கள் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இவர் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க | குண்டானதால் நடிகைக்கு நேர்ந்த துயரம்! அய்யய்யோ..இவருக்கு இந்த நிலையா..?
சினிமாவில் இருந்து விலகல்:
நடிகை கல்யாணி, சில ஆண்டுகளுக்கு முன்பு திரைத்துறையில் இருந்து விலகி விட்டார். இதற்கு ஆரம்பத்தில் காரணம் கூறாமல் இருந்த அவர், பின்பு பட வாய்ப்பு வேண்டுமென்றால் சமயங்களில் சில இயக்குநர்களிடம் இறங்கி போக வேண்டும் என்று கூறியதாகவும் அதனால் திரைத்துறையில் இருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கசப்பான வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து வந்தார்.
நடக்க முடியாத நிலையில்..
நடிகை கல்யாணி, மருத்துவமனையில் இருப்பது போன்று ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், அவர் நடக்க முடியாமல் செவிலியர்களின் உதவியுடன் நடப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த பதிவில் தான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருப்பதாகவும் தனது உடல் நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் விளக்கமாக கூறியிருப்பது பின்வருமாறு:
“கடந்த மாதம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை மிகவும் சோர்வடைய செய்து விட்டது. என் உடல் நிலையில் முகவும் மோசமான நிலையை அடைந்தேன். எனக்கு 2016ஆம் ஆண்டு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. என் மகள் நவ்யா பிறந்த பிறகு சிறிது நாட்கள் நன்றாகத்தான் இருந்தேன். ஆனால், 6 மாதத்திற்கு முன்பிருந்து என் முதுகு வலிக்க ஆரம்பித்தது. து குறித்து மருத்துவரை சந்தித்தோம். அவர் முன்னர் செய்த அருவை சிகிச்சை இன்னும் குணமாகவே இல்லை என்று என்னிடம் தெரிவித்தார். இப்படியொரு வார்த்தையை நான் கேட்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதனால் இந்த முறையும் எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை வேறு ஒருவரின் முதுகுத்தண்டு எனக்கு பொருத்தப்பட்டது. என் உடலை இனி நான் உதாசீனம் செய்ய மாட்டேன். இதனால்தான் என்னால் அதிகமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி..
விஜே கல்யாணிக்கு இவ்வாறு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ள செய்தி பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. கல்யாணி, சில நாட்களுக்கு முன்பாகத்தான் தனது தாயாரை இழந்தார். அப்போதிலிருந்து அவர் மன அளவில் பல விதமாக பிரச்சனைகளை சந்தித்து வருவதாக கூறியிருந்தார். இதனால், அவருக்கு மீண்டும் உடல்நலனில் இப்படியொரு பிரச்சனையில் இருப்பதை கேள்விப்பட்டுள்ள ரசிகர்கள் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ‘போர் தொழில்’ 2ஆம் பாகம் தயாராகுமா..? படத்தின் நாயகன் சொன்ன தகவல்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ