பிரபல நடிகர் விஷால் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் மார்க் ஆண்டனி .இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது லாரி ஒன்று வருவதுபோல் காட்சி ஒன்று படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தஅப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
மேலும் படிக்க | குக் வித் கோமாளியில் புதிய என்ட்ரி..திருமணம் ஆன இந்த நடிகையா?
அதாவது, அந்த லாரியானது வேகமாக படப்பிடிப்பு செட்டை நோக்கி வந்தது. இதில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர், நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுமார் 50-க்கு மேற்ப்பட்ட ஊழியர்கள் லாரி வேகமாக வருவதை கண்டு இருபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ எந்தவித உயிர் சேதமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகரான விஷால் படப்பிடிப்பின்போது நடந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
— Sridharan K (@reportersridhar) February 22, 2023
மேலும், ஓட்டுநர் ஓட்டி வந்த லாரி ஷூட்டிங்கிற்கு மட்டும் பயன்படுத்தப்படும் வண்டி. இந்த வண்டி ஓட்டுநர் பிரேக் பிடித்தும் நிற்கவில்லை. தற்போது இந்த விபத்து காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் அருந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மீண்டும் இணையும் தனுஷ் - ஏஆர் ரகுமான் காம்போ! எந்த படத்தில் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ