Oo Antava Mama; வைரல் ஆகும் கிலி பால் version வீடியோ

புஷ்பா படத்திலிருந்து ஓ ஆண்டவாவுக்கு நடனமாடும் வீடியோவை கிலி பால் பகிர்ந்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2022, 11:13 AM IST
Oo Antava Mama; வைரல் ஆகும் கிலி பால் version வீடியோ title=

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் டிசம்பர் 17 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் வெளியான திரைப்படம் புஷ்பா.‌

ஆந்திரப்பிரதேச கடைகளில் நடக்கும் செம்மரக்கடத்தல் திருட்டு தொடர்பாக விவரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் (Allu Arjun) செம்மரக்கடத்தல் வியாபாரம் செய்யும் புஷ்பராஜ் (Pushpa: The Rise part 1) என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.  மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் நடிக்கிறார்.

ALSO READ | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRR படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!!

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் தற்போது மெகா ஹிட் ஆகியுள்ளன. அத்துடன் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதன்படி, இந்த திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.  ‘ஓ சொல்றியா மாமா’ என தமிழில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆகி இருக்கிறது. அதேபோல் இந்த பாடல் தெலுங்கிலும் மெகா ஹிட் ஆனது. 

இந்த நிலையில் தற்போது ஜாலியான கிலி பால் ஆடிய நடன வீடியோக்களில் நீங்கள் பார்த்து இருப்பது உண்டு. பல பாலிவுட் மற்றும் டோலிவுட் பாடல்களின் ஸ்டெப்களை ஆடி கிலி இணையத்தில் டிரெண்ட் ஆக மாறியுள்ளது. அதன்படி கிலி பால் தனது இன்ஸ்டாகிராமமில் தற்போது ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இந்த வீடியோ 1.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. கிலிப்பில், பாரம்பரிய ஆடைகளை அணிந்து சமந்தாவின் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம். இந்த வீடியோ தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 144,000 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kili Paul (@kili_paul)

ALSO READ | 'பீஸ்ட்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News