நீச்சல் உடையில் உல்லாசமாக இருக்கும் ஹன்சிகா; போட்டோ வைரல்

ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2021, 01:16 PM IST
நீச்சல் உடையில் உல்லாசமாக இருக்கும் ஹன்சிகா; போட்டோ வைரல் title=

ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார்.

ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார். நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹன்சிகா மோட்வானி (Hansika Motwani) தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ALSO READ | Hansika-வின் ‘மஹா’படத்துடைய தெறிக்கவிடும் திகில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது

குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தற்போது இவர் மஹா என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ஹன்சிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் தற்போது வரை குவிந்துள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

 

ALSO READ | தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைந்த சிம்பு; லீக்கான புகைப்படம்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News