தளபதி 65 அதிரடி அப்டேட்: படப்பிடிப்பு துவங்கியது, பூஜையில் பூஜா கலந்துகொள்ளாதது ஏன்?

விஜய் படத்தின் படப்பிடிப்பு இன்று சன் ஸ்டுடியோவில் தொடங்கிவிட்டது என்பதை திரைப்பட விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை உறுதிப்படுத்தினார். பூஜா ஹெக்டே விஜய்யின் கதாநாயகியாக நடிக்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2021, 12:47 PM IST
  • தளபதி விஜயின் 65 வது படத்தின் சமீபத்திய அப்டேட்.
  • படத்தின் படப்பிடிப்பு இன்று சன் ஸ்டூடியோவில் துவங்கியது.
  • இப்படத்தை 2022 ஆம் ஆண்டு பொங்கலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தளபதி 65 அதிரடி அப்டேட்: படப்பிடிப்பு துவங்கியது, பூஜையில் பூஜா கலந்துகொள்ளாதது ஏன்?  title=

நெல்சன் இயக்கும் தளபதி விஜயின் 65 வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  பூஜா ஹெக்டே விஜய்யின் கதாநாயகியாக நடிக்கிறார்.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) மாஸ்டர் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைப் பற்றிய பேச்சையே இன்னும் ரசிகர்கள் பேசி நிறுத்தாத நிலையில், தளபதி 65 படத்தின் இந்த அப்டேட் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. 

விஜய் படத்தின் படப்பிடிப்பு இன்று சன் ஸ்டுடியோவில் தொடங்கிவிட்டது என்பதை திரைப்பட விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை உறுதிப்படுத்தினார். தற்காலிகமாக தளபதி 65 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், விஜய் இதுவரை தான் நடித்துள்ள 64 படங்களில் நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.  இந்த அதிரடி ஆக்‌ஷன் படத்தில், ஒரு ஏஜண்டாக விஜய் நடிக்கிறார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ: 'Master' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டார்

படத்தின் துவக்க பூஜையில் கலந்துகொள்ள முடியாத படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே (Pooja Hegde), ட்விட்டரில், “நான் வேறு இடத்தில் படப்பிடிப்பில் உள்ளதால் இன்று #தளபதி65 இன் பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் என் மனதும் இதயமும் அங்குதான் உள்ளன. விரைவில் படக்குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று எழுதினார். 

இந்த படத்தில் முன்னெப்போதும் காணப்படாத விஜயை ரசிகர்கள் பார்ப்பார்கள் என வட்டாரங்கள் கூறுகின்றன. மக்களை தன்வயப்படுத்தி ஈர்க்கும் வல்லமை படைத்த ஒரு ஏஜண்டாக இதில் நாம் விஜயை பார்ப்போம் என தெரிகிறது. நகைச்சுவை அம்சமும் படத்தில் அதிகம் இருக்கும் என படக்குழு தெரிவித்தது. 

ஆதாரங்களின்படி, விஜய் (Vijay) ஆரம்பத்தில் ரஷ்யாவில் படத்தின் முக்கிய காட்சிக்ளை படமாக்க திட்டமிட்டிருந்தார். இருப்பினும், COVID-19 தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால், அவரது திட்டங்கள் மாறின. இப்போது ஒரு சில காதல் காட்சிகள் மட்டுமே ரஷ்யாவில் படமாக்கப்படும், மீதமுள்ள படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும். இப்படத்தை 2022 ஆம் ஆண்டு பொங்கலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ: Anime Shows: 2021 இல் 40 புதிய அனிமேஷன் சீரியல்களை Netflix அறிமுகப்படுத்தும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News