கடந்த 20 வருடத்தில் பார்க்காத கதை! தளபதி 66 குறித்து கூறிய விஜய்!

'தளபதி 66' படத்தின் கதையை கேட்டு விஜய் நெகிழ்ந்து போனதாக படத்தின் தயாரிப்பாளர் டில் ராஜூ கூறியுள்ளார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2022, 02:15 PM IST
  • பீஸ்ட் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் சில பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
  • விஜய்யின் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.
கடந்த 20 வருடத்தில் பார்க்காத கதை! தளபதி 66 குறித்து கூறிய விஜய்!  title=

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் சில பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.  இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  இந்நிலையில் விஜய்யின் 66வது (Thalapathy 66) படத்தை இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. 

ALSO READ | 2022-ல் ஹிந்தியில் ரீமேக்காகும் 6 தமிழ் படங்கள்..!

இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் (Actor Vijay) தெலுங்கு திரையுலகில் என்ட்ரியாவதை நினைத்து ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.  தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படம் அதிக பொருட்செலவில் உருவாக இருக்கிறது.  தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் டில் ராஜூ இப்படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். 

அதில், இயக்குனர் வம்சி இப்படத்தின் கதையை கூறிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.  இதை நாங்கள் விஜயிடம் கூறிய போது அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்துவிட்டது.  அதுமட்டுமல்லாது அவர் நெகிழ்ந்து போய் சொன்ன ஒரு விஷயமும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.  அதாவது அந்த கதையை கேட்ட பிறகு அவர் இதுபோன்ற ஒரு அற்புதமான கதையை நான் இந்த 20 வருடத்தில் ஒருமுறை கூட கேட்டதில்லை என்று கூறினார்.  மேலும் படம் குறித்து கூறுகையில், விஜயை வைத்து உருவாக்கப்போகும் இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக கூறினார். 

மேலும் அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்க விரும்புகிறோம், இருப்பினும் கொரோனா தொற்றின் காரணமாக படப்பிடிப்பில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

ALSO READ | விஜயுடன் 3வது முறையாக மோதும் சிம்பு..! பீஸ்ட் VS வெந்து தணிந்தது காடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News