’தவிடன்’ கேரக்டரை வெளியிட்ட புகழ்

1947 ஆகஸ்ட் 16 படத்தில் நடித்துள்ள புகழ், அந்தப் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 25, 2022, 06:03 PM IST
  • கவுதம் கார்த்திக் உடன் நடித்திருக்கும் புகழ்
  • படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு
  • நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்
’தவிடன்’ கேரக்டரை வெளியிட்ட புகழ் title=

விஜய் டிவியில் காமெடி கலைஞராக அறிமுகமாகி, இன்று வெள்ளித்திரையில் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் புகழ்.அஜித்தின் வலிமை படத்தில் நடித்த புகழுக்கு, அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் தேடி தேடி வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பொன்குமார் இயக்கியுள்ள படம் 1947 ஆகஸ்ட் 16. இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் புகழ்.

மேலும் படிக்க | தவிர்க்க முடியாத தனிப் பெருங்கலைஞன்- # HBD கவுண்டமணி!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று சிவகார்த்திகேயன் வெளியிட்ட நிலையில், அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது, ஒரு கிராமத்தில் அவர்களை இளைஞர் ஒருவர் தீரமுடன் எதிர்த்த கதை படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவுதம் கார்த்திக் லீட் ரோலில் நடித்திருக்கிறார். அவருடன் புகழும் நடித்திருக்கிறார். இந்நிலையில், படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரத்தின் பெயரான ‘தவிடன்’ என்பதையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநரின் முழு கற்பனையில் உருவான கதாப்பாத்திரம் எனக் கூறியுள்ள புகழ், இந்த கதாப்பாத்திரத்தை தனக்கு தந்த இயக்குநர் பொன்குமார் மற்றும் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 1947 ஆகஸ்ட் 16 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரலாற்று கதையைக் பின்புலமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம், சிறப்பாக வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முருகதாஸ் முடிவெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகவும் வாய்ப்புகள் உள்ளன.

இதனிடையே, விரைவில் அடுத்த படத்தை இயக்கும் ஐடியாவிலும் முருகதாஸ் இருக்கிறாராம். விஜய் ஒகே சொன்ன கதை சரியாக வராததால், அந்தப் படத்துக்கு விதை போடும் முன்னரே முடிவுரை எழுதபட்டுவிட்டது. இதனால், இன்னொரு கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம். இதற்கான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் திரை வட்டாரங்கள் கூறுகின்றன. முருகதாஸ் கடைசியாக ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கியிருந்தார். 

மேலும் படிக்க | விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் மோதும் கார்த்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News