ஏப்ரல்-1 யூடியூப் ‘ஜாம்’ ஆவது உறுதியாம்! - ஏன் தெரியுமா?!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் வருகிற 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 24, 2022, 03:43 PM IST
  • விஜய்யின் பீஸ்ட் வரும் 13ஆம் தேதி ரிலீஸ்
  • பீஸ்ட் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?
  • பீஸ்ட் படத்தில் செல்வராகவனும் நடித்துள்ளார்
ஏப்ரல்-1 யூடியூப் ‘ஜாம்’ ஆவது உறுதியாம்! - ஏன் தெரியுமா?! title=

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ளது.

செல்வராகவன் நடித்துள்ள ‘சாணிக் காயிதம்’ ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனாலும் அப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதால் செல்வராகவன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகும் முதல் படமாக பீஸ்ட் அமையவுள்ளது. இயக்குநராக இருந்து தற்போது வில்லனாகவும் மிரட்டிவரும் எஸ்.ஜே.சூர்யா வரிசையில் செல்வராகவனும் இப்படத்தின் வாயிலாகத் தனி இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா என 2 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. முதல் பாடல் வெளியானபோதே இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்கத் துவங்கினர். இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. உண்மையிலேயே ஏப்ரல் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா அல்லது ‘ஏப்ரல் ஃபூல்’ செய்யும் விதமாக இப்படிக் கிளப்பிவிடப்பட்டதா எனும் விபரம் டீசர் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகே தெரியவரும்.

                                                                             Sarkar Tweet

பொதுவாகவே விஜய் படங்களின் போஸ்டர், பாடல், டீசர், ட்ரெய்லர் என எதுவாக இருந்தாலும் வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே இணையத்தை ஆக்கிரமித்துவிடுவது வழக்கம். சர்கார் படத்தின் டீசர் ரிலீசின்போது கூட அதன் வியூஸ் எண்ணிக்கையைக் கணக்கிட முடியவில்லை எனக் கூறி சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பீஸ்ட் டீசரும் சர்கார் போல இணையத்தை ஜாம் ஆக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க | விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Trending News