வாரிசு படக்குழு மீது விஜய் கோபம்?... பரபரப்பு தகவல்

வாரிசு படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு படக்குழு மீது விஜய் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jan 10, 2023, 08:20 PM IST
  • வாரிசு படம் நாளை வெளியாகிறது
  • படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது
  • மனைவி சங்கீதாவுடன் படத்தை பார்த்தார் விஜய்
வாரிசு படக்குழு மீது விஜய் கோபம்?... பரபரப்பு தகவல் title=

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் வாரிசு.தில்ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் வாரிசுக்கு தமன் இசையமைத்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. படத்தின் ட்ரெய்லர் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. 

அதுமட்டுமின்றி படம் முழுக்க தெலுங்கு வாடை அடிக்கப்போவதை ட்ரெய்லர் உறுதி செய்திருப்பதாக ஒரு தரப்பினரும், ட்ரெய்லரில் விஜய் பக்காவாக இருக்கிறார். படம் பக்கா ஃபேமிலி பேக்கஜாகவும், எமோஷனலாகவும் இருக்கப்போவதை ட்ரெய்லர் உறுதி செய்திருப்பதாகவும் மற்றொரு தரப்பினர் கூறிவருகின்றனர். படமானது நாளை வெளியாகவிருக்கிறது. இதற்கான முன் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.

அதேபோல், வாரிசு படத்தை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். முதல் காட்சியானது அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படவிருக்கிறது. வாரிசுடன் துணிவு ரிலீஸ் ஆவதால் இந்த பொங்கல் ரேஸில் வெல்லப்போவது யார் என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது. மேலும், வாரிசு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி அட்டகாசமாக இருப்பதாக ப்ரீமியர் ஷோ பார்த்தவர்கள் கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

Vijay

இந்தச் சூழலில் மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் திரையரங்கில் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் 'வாரிசு' படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க படக்குழு ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து படக்குழுவினர் சொன்ன நேரத்திற்கு விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் சென்றார் எனவும், இருப்பினும் சில காரணங்களால் படம் திரையிடப்பட தாமதமாகிவிட்டதாம்.

எனவே தளபதி விஜய் சற்று கோபமாக படக்குழுவிடம் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு மணி நேரம் தாமதமாக படம் போடப்பட்ட பின்னர், விஜய் மனைவியுடன் படம் பார்த்துவிட்டு இரவு 8:30 மணி போல் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கனல் கண்ணன் விவகாரம் - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மேலும் படிக்க | சாதி பெயரை சொன்னாரா திரிஷா... வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்கள் - என்ன ஆச்சு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News