விறுவிறுப்பாக நடைபெறுகிறது விடுதலை 2 படப்பிடிப்பு..! ரிலீஸ் எப்போது தெரியுமா..?

விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடித்துள்ள விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன.   

Written by - Yuvashree | Last Updated : Aug 17, 2023, 03:49 PM IST
  • வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான படம், விடுதலை.
  • இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
  • இதன் ரிலீஸ் எப்போது தெரியுமா..?
விறுவிறுப்பாக நடைபெறுகிறது விடுதலை 2 படப்பிடிப்பு..! ரிலீஸ் எப்போது தெரியுமா..?  title=

காமெடி நாயகனாக இருந்து முழு நேர சீரியஸ் நாயகனாக விடுதலை படம் மூலம் மாறியவர் சூரி. காவல் அதிகாரியாக விடுதலை படத்தில் நடித்திருந்த இவர், தனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

விடுதலை: 

தமிழ் சினிமாவின் நம்பக இயக்குநர்களுள் ஒருவராக கருதப்படுபவர், வெற்றிமாறன். ஜன்ரஞ்சகமான கதைகளை மக்களின் மனதில் அழுத்தமாக பதியும் அளவிற்கு இயக்கி தனக்கென தனி அடையாளத்தை அவர் தமிழ் சினிமாவில் பதித்துள்ளார். இவரது இயக்கத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படம், விடுதலை. இதில், நடிகர் சூரி காவல் அதிகாரியாக நடிக்க இவருக்கு எதிரான கதப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவர்களுடன் சேத்தன், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.  படம், கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியானது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இணைந்த பிரபலம்! அட இவரா..!

விடுதலை பாகம் 2: 

விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு கடம்பூரில் உள்ள ஒருஅடர்ந்த காட்டுப்பகுதியில் நடைப்பெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று ஆரம்பித்தது. முதல் பாகத்தில் நாயகன் சூரியையும் கிராம மக்களையும் சுற்றி நிகழுவது போல படத்தின் கதையம்சம் இருந்தது. ஆனால், இந்த பாகத்தில் விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக் உள்ளிட்ட அம்சங்கள் காண்பிக்கப்பட உள்ளன. இதன் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது. குறிப்பாக சிறுமலை எனும் இடத்தில் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகின்றன. 

இன்னும் 40 நாட்கள்..

விடுதலை படத்தின் படப்பிடிப்பு, இன்னும் 40 நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பு சிறுமலை பகுதியில்தான் நடைப்பெற்று வருகிறது. முதல் படத்தின் கதை, விடுதலை பார்ட் 2விலும் தொடர உள்ளது. இந்த படத்தின் பாடல்களுக்கும் இலையராஜாவே இசையமைக்கிறார். 

இது புது கதாப்பாத்திரம்..

எந்த ஒரு படத்திற்கும் இரண்டாம் பாகம் எடுத்தால் புது கதாப்பாத்திரம் வருவது போல, விடுதலை இரண்டாம் பாகத்திலும் சில புதிய கதாப்பாத்திரங்கள் வரவுள்ளன. அதிலும் முக்கியமாக விஜய் சேதுபதியின் மனைவி கதாப்பாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். துணிவு படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்த மஞ்சு வாரியர்தான் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக வருவதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் இருக்கும் முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவர். இவர், தனுஷ் உடன் ‘அசுரன்’ படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தையும் வெற்றி மாறன்தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரிலீஸ் எப்போது..? 

விடுதலை படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் படக்குழு தற்போது படப்பிடிப்பு வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | அடங்கேப்பா..! ‘இந்த’ பேய் படத்தில் 10 பாடல்கள் இருக்கா..? இசையமைப்பாளர் சொன்ன தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News