95 நாட்கள் பிக்பாஸில் தாக்குப்பிடித்த விசித்ரா! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Vichitra Salary In Bigg Boss 7 Tamil: நடிகை விசித்ரா, பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து, அவர் இதுவரை வாங்கிய சம்பள தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 7, 2024, 10:29 AM IST
95 நாட்கள் பிக்பாஸில் தாக்குப்பிடித்த விசித்ரா! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு? title=

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் சீசன் 7 போட்டியில், பலமான போட்டியாளர்களாக கருதப்பட்ட பலர் எவிக்ஷனில் வெளியே வந்தனர். அந்த வகையில், விசித்ராவும் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார். 

எவிக்ட் ஆன விசித்ரா..

90களில் தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர், விசித்ரா. 2000 ஆண்டிற்கு பிறகு திரையுலகின் பக்கமே வராத இவர், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க ஆரம்பித்தார். இதன் மூலம் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இடம் பெற வாய்ப்பு கிடைத்தது. அப்படியே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ளும் நுழைந்த விசித்ரா, அந்த வீட்டில் பல இளம் தலைமுறையினர் போட்டியாளர்களாக இருந்தும் அவர்களுக்கு ஈடு கொடுத்து அனைவரிடமும் சண்டையிட்டு இவர் 95 நாட்கள் வரை அந்த வீட்டில் இருந்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விசித்ரா வாங்கிய சம்பளம்..

பிக்பாஸ் போட்டியை பொறுத்தவரை, இதில் பங்கேற்பாளர்களாக இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு சம்பளம் இவ்வளவு என ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அந்த வகையில், விசித்ராவிற்கும் ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், 95 நாட்கள் வரை இவர் இந்த இல்லத்தில் இருந்ததால் இவருக்கு ரூ.35 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்களிலேயே இவர் உள்பட ஒரு சிலருக்குத்தான் இது போன்ற பெரியத்தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பணப்பெட்டியை எடுக்காத விசித்ரா..

பிக்பாஸ் போட்டியில், கடந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது. 3 லட்சத்தில் ஆரம்பித்த இந்த பணப்பெட்டியின் விலை, ரூ.16 லட்சம் வரை உயர்ந்ததது. இதை விசித்ரா எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் “என்னை நம்பி இருக்கும் மக்களுக்காக இந்த பணப்பெட்டியை தொட மாட்டேன்” என கூறிவிட்டார். இதையடுத்து, புத்திசாலித்தனமாக யோசித்த பூர்ணிமா, பணப்பெட்டியுடன் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார். இவரும், நேற்றைய எபிசாேடில் கமல்ஹாசன் அருகில் நின்று பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். இவர் பணப்பெட்டியை எடுத்திருக்கலாம் என சில பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது கருத்தினை வெளிப்படுத்தினர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 7ல் இத்தனை காதல் புறாக்களா? மணி-ரவீனா, பூர்ணிமா-விக்ரம்..லிஸ்ட் பெரிசு!

இறுதிப்போட்டிக்கு தேர்வான 6பேர்..

வழக்கமாக பிக்பாஸ் போட்டியின் இறுதிக்கட்டத்திற்கு 5 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால் இந்த முறையோ இந்த இல்லத்தில் மொத்தம் 6 பேர் இருக்கின்றனர். இதில், விஷ்ணு ஏற்கனவே இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை பெற்று விட்டார். ஆனால் இவர் டைட்டிலை பெறுவது சந்தேகம்தான்.

இந்த சீசனில் அதிக கவனம் ஈர்த்தவர், மாயா. இவர்,இந்த இல்லத்தில் 100 நாட்கள் இருக்கும் போட்டியாளர் ஆவார். இவரையடுத்து மக்களின் ஆதரவை அதிகம் பெற்றவராக இருப்பவர், அர்ச்சனா. இவர், வைல்டு கார்டு மூலம் இந்த பாேட்டிக்குள் நுழைந்தார். போட்டிக்குள் நுழைந்த முதல் வாரமே சண்டை-அழுகை என தன்னை சுற்றியே வீட்டின் அனைத்து நிகழ்வுகளும் இருப்பது போல பார்த்துக்கொண்டார். இதனால், இவருக்கு அப்போது ஆரம்பித்த மக்களின் ஆதரவு இப்போதும் தாெடர்ந்து காெண்டிருக்கிறது. மாயா அல்லது அர்ச்சனா டைட்டில் வின்னராக வரலாம் என கூறப்படுகிறது.

இவர்களை அடுத்து 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர், மணிச்சந்திரா. ஆனால் இவர் டைட்டில் வாங்குவதும் சிரமம்தான். பிற போட்டியாளர்களான தினேஷ் மற்றும் விஜய் வர்மா இருவருமே வைல்டு கார்டில் வந்தவர்கள். இவர்களும் இறுதிப்போட்டி மேடையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லை. 

மேலும் படிக்க | Poornima Ravi:16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா..பிக்பாஸில் மொத்தமாக சம்பாதித்தது எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News