Viduthalai: விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!

Viduthalai: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்திற்கு பல்வேறு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jan 24, 2024, 08:42 AM IST
  • இந்த ஆண்டு வெளியாகும் விடுதலை பார்ட் 2.
  • படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது.
  • மே மாதம் படத்தை வெளியிட திட்டம்.
Viduthalai: விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்! title=

Viduthalai: ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி - சூரி நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை I & II’. குறிப்பாக ‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஜனவரி 31 அன்று நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை I & II’  திரையிடப்படத் தேர்வாகியுள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 'கேப்டன் மில்லர் அப்பட்டமான திருட்டு... நாவலில் இருந்து கதை அப்படியே காப்பி' - அதிர்ச்சி தகவல்

இப்போது, இது அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. அதாவது புனேவில் நடைபெற்ற புனே சர்வதேச திரைப்பட விழா (PIFF) 2024-ல் சிறப்புத் திரையிடலின் போது ’விடுதலை1’ சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் 31, 2023 அன்று வெளியான ’விடுதலை- பார்ட்1’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. நடிகர்களின் திறமையான நடிப்பு, இசைஞானி இளையராஜாவின் மாயாஜால இசை மற்றும் சிறந்த தொழில்நுட்பப் பணிகள் என இந்தப் படத்தில் அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது. இந்த வருடம் 2024, கோடை விடுமுறையில் ’விடுதலை- பார்ட் 2’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானபோதே இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்தாலும், 'விடுதலை 2' படத்தின் வெளியீடு தாமதமாகி வருகிறது. வெற்றி மாறன் 'விடுதலை பார்ட் 2' படத்தின் க்ளைமாக்ஸ் பகுதியை பனியில் படமாக்க முயற்சித்துள்ளார், அதை கிட்டத்தட்ட 100 நாட்கள் எடுத்துள்ளார். பின்பு அதே மாதிரி படமாக்கினால் 4 ஆண்டுகள் ஆகும் என்பதை உணர்ந்து சிஜியில் பனியை கொண்டு வர முடிவு செய்தார். ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பை முடிக்க விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் போர்ஷன் மட்டும் இன்னும் படமாக்கப்படவில்லை, எனினும் விரைவில் முடிப்பதாக இயக்குனர் உறுதி அளித்துள்ளார். 

விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் பகுதிகளை படமாக்க வெற்றி மாறன் டி-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஹாலிவுட் தொழில்நுட்ப வல்லுனருடன் இணைந்து டி-ஏஜிங் முறையைப் பயன்படுத்தி வருகிறார். ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 'விடுதலை' படத்தில், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார், மேலும் படத்தின் இரண்டாம் பாகம் மே மாதம் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | Ethirneechal Actress: விஜய்யின் GOAT படத்தில் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News