வெங்கட் பிரபுவின் நடிப்பில் வெளியாகிறது 'லாக்கப்': OTT Release தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபுவின் நடிப்பில், லாக்கப் என்ற படம் நேரடியாக OTT -யில் வெளிவரவுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 20, 2020, 03:38 PM IST
  • வெங்கட் பிரபு பல வித்தியாசமான படங்களை தன் வித்தியாசமான பாணியில் இயக்கி புகழ் பெற்றுள்ள ஒரு வெற்றி இயக்குனராவார்.
  • மாநாடு என்ற தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை வெங்கட் பிரபு இவ்வாண்டு துவக்கத்தில் தொடக்கினார்.
  • வெங்கட் பிரபுவின் நடிப்பில், லாக்கப் என்ற படம் நேரடியாக OTT -யில் வெளிவரவுள்ளது.
வெங்கட் பிரபுவின் நடிப்பில் வெளியாகிறது 'லாக்கப்': OTT Release தேதி அறிவிப்பு title=

இயக்குனர் வெங்கட் பிரபு பல வித்தியாசமான படங்களை தன் வித்தியாசமான பாணியில் இயக்கி புகழ் பெற்றுள்ள ஒரு வெற்றி இயக்குனராவார். அவர் கடைசியாக சென்னை 600028 IInd இன்னிங்ஸை இயக்கியிருந்தார். இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. பல நட்சத்திரங்கள் நடித்துள்ள பார்டி என்ற படத்தையும் அவர் இயக்கியுள்ளார், இன்னும் இப்படம் வெளிவரவில்லை.

இந்நிலையில், மாநாடு என்ற தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை வெங்கட் பிரபு இவ்வாண்டு துவக்கத்தில் தொடக்கினார். இது ஒரு அரசியல் சார்ந்த படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியொர் நடிக்கின்றனர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வக்கப்பட்டுள்ளது.

இப்போது வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) நடிப்பில், லாக்கப் (Lockup) என்ற படம் நேரடியாக OTT -யில் வெளிவரவுள்ளது. அறிமுக இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கும் இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ZEE5 OTT வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வைபவ் (Vaibhav) வாணி போஜன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதற்கு முன்னரும் வெங்கட் பிரபு பல படங்களில் முக்கிய வேடங்களிலும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். அவர் இயக்கிய சென்னை 600028, கோவா, சரோஜா ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்த வெற்றிப் படங்களாகும். 

Trending News