வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அஸ்வின்ஸ் பட டீசர் வெளியீடு

வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அஸ்வின்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2023, 02:13 PM IST
  • வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அஸ்வின்ஸ் படத்தின் டீசர்.
  • டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அஸ்வின்ஸ் பட டீசர் வெளியீடு title=

வசந்த் ரவி கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட படங்களுக்காக பரவலாக அறியப்பட்ட திரைப்பட இயக்குனர் ராம் மூலம் இவர் 2013 ஆம் ஆண்டில் தனது முதல் நடிப்பு வாய்ப்பைப் பெற்றார். பின்னர் இவர் தனது முதல் படமான தரமணியில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் வழியாக தமிழ்த் திரையுலகில் முக்கியத்துவம் பெற்றார். இப்படத்தில் நடித்ததற்காக நிறந்த அறிமுக நடிகராக 10 வது விஜய் விருதுகள் மற்றும் ஜியோ 65 வது தென் பிலிம்பேர் விருதுகளிலும் 2018 ஆண்டு பெற்றார். வசந்த் திரைப்பட நடிகராக ஆவதற்கு முன்பு மான்செஸ்டரில் பகுதிநேர மருத்துவராக பணியாற்றினார்.

இதற்கிடையில் தற்போது இவர் இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க திரில் கதை அம்சம் கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த படத்தில் விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சித்தார்த் இசையில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு எட்வின் சாகே ஒளிப்பதிவும், வெங்கட்ராஜன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

மேலும் படிக்க: அடங்கேப்பா... ரிலீஸ்க்கு முன்பே வசூலை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2!

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது ‘அஸ்வின்ஸ்’ என்ற திரைப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ட்ரெய்லர் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

தற்போது நடிகர் வசந்த் ரவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரஜினியின் கேரக்டர் சீக்ரெட்டை சொன்ன ஜெயிலர் பட நடிகர்... என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News