வாரிசு - இன்று மாலை வெளியாகிறது ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலின் ப்ரோமோ இன்று மாலை வெளியாகுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 3, 2022, 12:09 PM IST
  • வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ இன்று வெளியாகிறது
  • தமன் இசையமைத்திருக்கிறார்
  • விஜய் இந்தப் பாடலை பாடியிருக்கலாம் என எதிர்பார்ப்பு
வாரிசு - இன்று மாலை வெளியாகிறது ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ title=

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. படத்தில் பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தில்ராஜூ படத்தை தயாரிக்கிறார்.

படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக சமீபத்தில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இசையமைப்பாளர் தமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி என்று குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாவதைத்தான் தமன் இவ்வாறு கூறியிருக்கிறார் என பதிவிட்டுவந்தனர். 

இதனையடுத்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 'ப்ரின்ஸ்' படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட தமன், இந்த தீபாவளிக்கு ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என கூறினார். ஆனால் தீபாவளி அன்று வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகாமல் புதிய போஸ்டர் வெளியானது. அதுமட்டுமின்றி படம் பொங்கலுக்கு வெளியாவதையும் உறுதி செய்திருந்தது படக்குழு.

Varisu

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று பலரும் தலையை பிய்த்துக்கொண்டிருந்தனர். ஒருவழியாக அதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | நமது செழுமையான பாரம்பரியம் - காந்தாராவை பாராட்டிய மத்திய அமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News