மாரி-2 குடும்பத்தில் இணையும் அடுத்த பிரபலம்!

இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் டிவிட் செய்துள்ளார்.

Last Updated : Dec 28, 2017, 08:03 PM IST
மாரி-2 குடும்பத்தில் இணையும் அடுத்த பிரபலம்! title=

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. 

இதையடுத்து, இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் பாலாஜி மோகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாரி 2 அப்டேட்டினை பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது பாலாஜி மோகனின், மாரி 2 படத்தில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என பதிவிட்டுள்ளார். முன்னதாக இப்படத்தின் ஹீரோயினாக "ப்ரேமம்" திரைப்பட புகழ் சாய்பல்லவி களமிரங்குகிறார் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

மேலும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் டிவிட் செய்துள்ளார்.

Trending News