வரவிருக்கும் பொங்கல் விழா சினிமா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பொங்கலன்று ஒரே நாளில் ரிலீஸாக இருக்கின்றன. இதனால், ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், வாரிசு திரைப்படம் சென்டிமென்ட் - ஆக்ஷன் கலந்த கலவையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வம்சி பைடிபல்லி. அண்மையில் இந்த படத்தில் இருந்து விஜய் குரலில் ரிலீஸான ரஞ்சிதமே பாடல் கூட செம ஹிட் அடித்தது.
மேலும் படிக்க | பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகை கொள்ளை... வாட்ச்மேன் உடந்தையா?
அதேபோல், ஹெச். வினோத் இயக்கும் துணிவு படமும் பொங்கல் விருந்தாக தமிழில் ரிலீஸாக இருக்கிறது. அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்ற படத்தின் சூட்டிங் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தில் உள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கிவிட்டன. பொங்கல் விடுமுறையை கணக்கு வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், வசூலில் செம ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் துணிவு படத்தின் திரையரங்கு ரைட்ஸை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த டீலை முடித்துவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அந்த பேட்டில் அவர் தொடர்ந்து பேசும்போது, வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டும் பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றாலும், திரையரங்குகள் சரி சமமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இரண்டு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். திரையரங்குகள் ஒதுக்கீட்டால் படத்தின் வசூல் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் வாரிசு படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
மேலும் படிக்க | ஆடை சர்ச்சை...வீடியோவில் பொய் சொன்ன சதீஷ் - பதிலடி கொடுத்த தர்ஷா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ