Tamil Serial Karthigai Deepam Latest News: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி கலசத்தை கண்டுபிடிக்க தண்ணி கேன் போடும் கம்பெனிக்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் அந்த வண்டி குறித்து விசாரிக்க என் ப்ரண்ட் எடுத்துட்டு போய் இருந்தான் என்று சொல்ல அந்த நபருக்கும் ரவுடிகளுக்கு சம்மந்தம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறான். இதை தொடர்ந்து அந்த ரவுடிகளை தேடி வருகிறான்.
மறுபக்கம் சேட்டு வீட்டிற்குள் புகுந்த நாகம் ஒன்று குழந்தையை சீண்டி விட சேட்டுவின் மனைவி குழந்தையை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். இங்கே கார்த்திக் ரவுடிகளை கண்டுபிடித்து அவர்களை அடித்து விசாரிக்க கலசத்தை விற்று விட்டதாக சொல்கிறார்கள்.
இதையடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி இந்த பக்கமாக வர குழந்தையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர், சேட்டுவின் மனைவி போன் போட்டு அந்த கலசத்தால் தான் எல்லா பிரச்னையும் என பேச கார்த்திக் கலசம் என்ற வார்த்தையை கேட்டு விட்டு அந்த பெண்ணை விசாரிக்கிறான்.
சேட்டுவின் மனைவி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அந்த கலசத்தை தேடி தான் நாங்க வந்தோம் என கார்த்திக் சொல்ல அந்த பெண்மணி சேட்டுவை சந்தித்து கலசத்தை வாங்கிக்கோங்க என்று சொல்கிறாள்.
ஆனால் சேட்டு ஒரு குடோனில் வெளிநாட்டு நபர்களை சந்தித்து கலசத்தை கொடுத்து பணத்தை வாங்கி கொண்டு கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ