அஜித் இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் யோகிபாபு! மாஸ் அப்டேட்

துணிவு பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்தாக யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 4, 2022, 04:38 PM IST
  • ஹெச்.வினோத் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ
  • யோகிபாபு நடிக்க இருப்பதாக தகவல்
  • காமெடியான திருடன் - போலீஸ் கதையாம்
அஜித் இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் யோகிபாபு! மாஸ் அப்டேட்  title=

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருக்கும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்தப் படத்துக்கு போட்டியாக விஜய்யின் வாரிசு படமும் வர இருக்கிறது. கோலிவுட்டின் பெரிய ஸ்டார்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோத இருப்பதால் ரசிர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும், விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க இருக்கின்றனர். துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளியாவதற்கு முன்பே, அஜித் மற்றும் விஜய்யின் அடுத்த படங்கள் தொடர்பான அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில்,இயக்குநர் ஹெச். வினோத்தின் அடுத்த படம் குறித்த அப்டேட்டும் இப்போது வெளியாகி இருக்கிறது.

அவர் அடுத்த படத்தில் யோகிபாபுவை ஹீரோவாக வைத்து படம் எடுக்க இருக்கிறாராம். திருடன் மற்றும் போலீஸ் கதை என்றாலும் காமெடியாக இருக்கும் வகையில் கதை வடிவமைக்கப்பட இருக்கிறதாம்.

ஹெச். வினோத் தெரிவித்த ஒன்லைன் ஸ்டோரிக்கு யோகி பாபுவும் ஒகே சொல்லிவிட்டாராம். துணிவு படம் ரிலீஸான பிறகு, இந்த படம் குறித்த அடுத்தகட்ட அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

Trending News