7 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தனுஷ் - அனிருத்! வெளியானது தாய்க்கிழவி பாடல்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ஃபர்ஸ்ட்  சிங்கிள் தாய்க்கிழவி வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 24, 2022, 06:47 PM IST
  • வெளியானது தாய் கிழவி பாடல்.
  • 7 வருடங்களுக்கு பின் இணைந்த தனுஷ் - அனிருத்.
  • ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ளது.
7 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தனுஷ் - அனிருத்! வெளியானது தாய்க்கிழவி பாடல்! title=

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.  சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், நித்ய மேனன், பிரகாஷ் ராஜ், முனீஷ்காந்த், பாரதிராஜா, அறந்தாங்கி நிஷா போன்ற பலர் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.  தனுஷ் அவரது சமூக வலைதள பக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை குறிக்கும் மோஷன் பிக்ச்சர் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.     

 

மேலும் படிக்க | வாரிசு போஸ்டர் காப்பி சர்ச்சை: OTTO நிறுவனம் கொடுத்த அதிரடி பதில்

அனிருத் மற்றும் தனுஷ் இருவரின் காம்போ இணைந்திருக்கும் இந்த படத்தின் பாடல்களை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியானது.  நாட்டாமை படத்தில் நடிகர் பொன்னம்பலம், நடிகை மனோரமாவை பார்த்து தாய்க்கிழவி என்று கூறுவார், இந்த டயலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.  அந்த டயலாக்கை வைத்து தான் இந்த பாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது, இப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் டயலாக்குகளை பாடல்களில் சேர்ப்பது ட்ரெண்டாகிவிட்ட நிலையில் இந்த படத்திலும் அவ்வாறு சேர்க்கப்பட்டு இருக்கிறது.

 

படக்குழு அறிவித்தபடி ஜூன்-24ம் தேதியான இன்று திருச்சிற்றம்பலம் படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் வெளியானது.  அனிரூத் இசையில், தனுஷ் இந்த பாடலை எழுதி, பாடியிருக்கிறார், இந்த பாடலுக்கான நடன அசைவுகளை நடன மாஸ்டர் சதிஷ் செய்துள்ளார்.  ஹீரோயினை, ஹீரோ கேலி செய்யும் விதமாக அதே சமயம் ஜாலியான பாடலாக அமைந்துள்ளது.  திருவிழா கூட்டத்தில் சொந்தபந்தங்கள் ஒன்றுகூடி கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது.  இந்த பாடலில் அனைத்து நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.  ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் விஜய்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News