The GOAT Secrets! மகனுடன் விஜய்க்கு பிரச்சனையா? திரிஷாவுக்கு முக்கியத்துவம் ஏன்?

The GOAT Secrets: மகனுடன் விஜய்க்கு பிரச்சனையா? திரிஷாவுக்கு முக்கியவத்துவம் ஏன்? அடுத்த தளபதியை அடையாளம் காட்ட வேண்டிய அவசரம் என்ன? குடும்ப பிரச்சனைகளை பொதுவெளியில் பேசினாரா விஜய்? வாருங்கள் பார்ப்போம்!

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Sep 5, 2024, 09:00 PM IST
  • மட்ட பாடலுக்கு, கில்லி ஸ்டெப் போட்டு விஜய்யும் - திரிஷாவும் மாஸ் காட்டுகிறார்கள்.
  • உன் மனதை மாற்றியது யார்? சொந்த குடும்ப பிரச்சனையை வெளியுலகிற்கு விஜய் சொன்னாரா?
  • தி கோட் படத்தில் பேச நிறைய விஷயங்கள் இருந்தாலும், சில சுவாரஸ்ய விஷயங்கள் வைரல்
The GOAT Secrets! மகனுடன் விஜய்க்கு பிரச்சனையா? திரிஷாவுக்கு முக்கியத்துவம் ஏன்? title=

GOAT Movie Review: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் (The Greatest of All Time) திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய விஷயமாக De-aging செய்யப்பட்ட விஜய் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் (Goosebumbs) கொடுத்துள்ளார். விஜயகாந்த் தொழில்நுட்ப வசதியால் திரையில் தோன்று மனதை தொடுகிறார். மட்ட பாடலுக்கு, கில்லி ஸ்டெப் போட்டு விஜய்யும் - திரிஷாவும் மாஸ் காட்டுகிறார்கள்.

தி கோட் படத்தில் அஜித், இளையராஜா பாட்டு, தோனி என ஆரம்பம் முதல் கடைசி வரை பல சப்ரைஸ்கள் படத்தில் உள்ளது. படம் நிச்சயம் அண்ணனுக்கு ஹிட் கொடுத்தாலும், படத்தில் இருந்த சில விஷயங்கள் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

இந்த படத்தில் ஹீரோ விஜய்யின் மகனாக வரும் ரோலுக்கு சஞ்சய் என பெயர் வைத்துள்ளனர். நடிகர் விஜய்யின் மகன் பெயர் அதுதான் என்பது நமக்கு தெரிந்தது தான். மகன் மீதான பாசத்தால் இந்த பெயரை வைத்ததாக ஆரம்பத்தில் நினைக்க தோன்றினாலும், கிளைமேக்ஸ்சில் உன் மனதை மாற்றியது யார் எனக் கேட்டு சொந்த குடும்ப பிரச்சனையை விஜய் வெளியுலகிற்கு சொன்னதாக இணையத்தில் சிலர் எழுதி வருகின்றனர்.

மேலும் படிக்க - GOAT Movie review : விஜய்யின் The GOAT படம் மாஸா? தூசா? விமர்சனம் இதோ!!

அடுத்ததாக மட்ட பாடலுக்கு திரிஷா, விஜய்யுடன் சேர்ந்து நடனமாடி அசத்தியுள்ளார். ஒரு பாடலுக்கு ஆடுவதை பெரும்பாலும் பெரிய நடிகைகள் அவ்வளவு எளிதில் செய்ய மாட்டார்கள், அதோடு தனது இன்ஸ்டா ஸ்டோரியில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனக்கு விஜய், திரிஷாவை பிடிக்கும் என பேட்டி ஒன்றில் பேசியதை திரிஷா ஷேர் செய்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து லியோவில் இந்த ஜோடி இணைந்தாலும், அடுத்த படத்திலும் ஒரு பாடலுக்கு இணைந்து வந்தது மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோல் செய்துள்ளது அனைவரும் அறிந்தது தான். ஆனாலு அவர் வரும் காட்சியில், இனி சினிமாவை நான் பார்த்துக்கொள்கிறேன், அரசியலை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்ற மீனிங்கில் ஒரு வசனம் பேசுகிறார். பொதுவாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற டாப்பிக் வந்தாலே அது ரணகள சண்டையாக ரசிகர்கள் இடையே மோதலை ஏற்படுத்தும். ஆனால், இந்த படத்தில் தளபதி தனது அடுத்த வாரிசு என்ற ரேஞ்சில் எஸ்கே-வை அடையாளம் காட்டிவிட்டாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு படம் நடிக்க உள்ள நிலையில், இந்த அவசரம் ஏன் என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். 

தி கோட் படத்தில் பேச நிறைய விஷயங்கள் இருந்தாலும், இந்த சுவாரஸ்ய விஷயங்கள் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க - விஜயகாந்த் முதல் திரிஷா வரை... தி கோட் படத்தில் கலக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News