இங்கிலாந்து இளவரசி டயானாவின் வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் 'The Crown' மெகா சீரியல்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கிரவுன் சீசன் 4 நிகழ்ச்சி அறிமுகமானது. கிரவுன் சீசன் 4  (Crown season 4) நிகழ்ச்சிக்கு விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் பல்வெறு வகையான விமர்சனங்கள் வந்துள்ளன. இந்தத் தொடரின் நிகழ்வுகளை சித்தரிப்பதில் அரச பரம்பரையைப் பற்றி எழுதும் வரலாற்றாசிரியர்கள் பெரிதும் மகிழ்ச்சியடையவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2020, 08:55 PM IST
  • 'தி கிரவுன்' தொடரில் இளவரசி டயானா மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன
  • OTT தளத்தில் பரவலாக பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்றாக 'தி கிரவுன்' மாறியுள்ளது
  • இந்த நிகழ்ச்சி அரச குடும்பம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் போன்றவற்றை பெரும்பாலும் காட்டுகிறது
இங்கிலாந்து இளவரசி டயானாவின் வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் 'The Crown' மெகா சீரியல் title=

இளவரசி டயானாவின் சகோதரர் 'தி கிரவுன்' சீசன் 4 இல் சகோதரியின் கதாபாத்திரம் பற்றிய கருத்தை பகிர்ந்துக் கொள்கிறார். Netflix Crown season 4: நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கிரவுன் சீசன் 4 நிகழ்ச்சி அறிமுகமானது. கிரவுன் சீசன் 4  (Crown season 4) நிகழ்ச்சிக்கு விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் பல்வெறு வகையான விமர்சனங்கள் வந்துள்ளன. இந்தத் தொடரின் நிகழ்வுகளை சித்தரிப்பதில் அரச பரம்பரையைப் பற்றி எழுதும் வரலாற்றாசிரியர்கள் பெரிதும் மகிழ்ச்சியடையவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

பிரிட்டன் இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சரும் Crown season 4 குறித்த தனது கவலையை வெளியிட்டுள்ளார். அந்த பிரபலமான தொடரில் தனது சகோதரியும் இங்கிலாந்து இளவரசியுமான டயானாவின் வாழ்க்கையை சித்தரிப்பது குறித்த தனது ஆட்சேபங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

'தி கிரவுன்' ('The Crown') தொடர், ஒரு புனைகதை என்பதை பார்வையாளர்கள் மறந்துவிடுவார்கள் என்று கவலைப்படுவதாகக் கூறும் அவர், இந்த நிகழ்ச்சி "நிறைய அனுமானங்களையும் நிறைய கண்டுபிடிப்புகளையும்" பயன்படுத்துகிறது என்றும் கூறினார். ஆனால், உண்மையில் பிரபல அரச குடும்பங்களின் கதாபாத்திரங்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப சித்தரிப்பதால், உண்மை மறைந்து திரையில் தோன்றுவதே சரி என்று எதிர்கால சந்ததியினர் நம்பும் சாத்தியக்கூறுகளைப் பற்றி அவர் கவலைப்படுகிறார்.

"நீங்கள் உண்மை சம்பவத்தையே எடுக்கலாம். ஆனால் இடையில் இடைச்செறுகல்கள் இல்லாமல் திரைக்கதை அமைப்பது அபூர்வம், அது கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்" என்று அவர் தனது கவலைகளை தெளிவாக விளக்கினார், நிகழ்ச்சியைப் பார்க்கும்போது "கொஞ்சம்" மனக்குழப்பம் ஏற்படுவதாகவும் இளவரசி டயானாவின் சகோதரர் கூறுகிறார். ஸ்பென்சர் குடும்பத்தின் வீட்டில் நெட்ஃப்ளிக்ஸ் தொடரை படமாக்க முடியுமா என்று தயாரிப்பாளர் கேட்டதையும் டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர் சுட்டிக் காட்டுகிறார்.  

"உண்மையில், தயாரிப்பாளர்கள், ஆல்தார்ப் (Althorp) அரண்மனையில் தொடரின் படபிடிப்பு நடத்த அனுமதி கேட்டனர். நான் மறுத்துவிட்டேன்" என்று அவர் கூறினார். "எனக்கு ஏற்படும் மிகப்பெரிய கவலை என்னவென்றால், மக்கள் இது போன்ற ஒரு தொடரைப்  பார்க்கிறார்கள், அது புனைகதை என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டினர், அப்படி நினைப்பதற்கான வாய்ப்பு அதிகம்” என்று சார்லஸ் கூறுகிறார்

Also Read | நாக சைத்தன்யாவின் Love Story பட first look poster வெளியிட்டு Happy Birthday சொல்லும் சமந்தா...

"என்னால் முடிந்தவரை என் சகோதரி இளவரசி டயானாவுக்காக பேசுவது எனது கடமை என்று நினைக்கிறேன்," என்று சார்லஸ் மேலும் கூறினார். "நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம். டயானா என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள். நாம் சிறுவயதில் இருந்து ஒன்றாக வளரும்போது அந்த பாசம் என்றென்றும் நீடிக்கும். பிற்காலத்தில் அவர்கள் எப்படி மாறினாலும் சரி, அது முக்கியமல்ல. ”

'தி கிரவுன்' ('The Crown') தொடரில் இளவரசி டயானா (Princess Diana) மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் (Margaret Thatcher) ஆகியோரின் கதாபாத்திரங்கள் வந்தவுடன், இந்த நிகழ்ச்சி OTT தளத்தில் (OTT platform) பரவலாக பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சி எப்போதுமே அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் நல்லவர்கள் என்று சித்தரிக்கவில்லை. அரச குடும்பம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள், வெளியுலகில் பிரபலமாக பேசப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றை பெரும்பாலும் காட்டுகிறது. பல ஆண்டுகளாக அரச குடும்பத்தால் ரகசியமாக காப்பாற்றப்பட்டுவரும் இந்த விவகாரங்களும், விஷயங்களும் தற்போது 'தி கிரவுன்' ('The Crown') தொடரில் எப்படி காட்டப்படுகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்தால்,சம்பந்தப்பட்ட அரச குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். 

Read Also | Thailand: பாரம்பரிய இசையை கேட்டு பசியாறும் பசித்த குரங்குகள்  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News