'KGF-2' பட எடிட்டர் ஒரு சிறுவனா?! மிரண்டு பார்க்கும் திரையுலகம்!

கே.ஜி.எஃப்- 2 படத்தின் எடிட்டர் உஜ்வால் குல்கர்னியின் வயது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 14, 2022, 08:17 PM IST
  • கே.ஜி.எஃப்- 2 திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.
  • நடிகர் யஷ் நடித்துள்ள படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  • இப்படத்தின் எடிட்டர் பற்றிய சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.
'KGF-2' பட எடிட்டர் ஒரு சிறுவனா?! மிரண்டு பார்க்கும் திரையுலகம்! title=

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள கேஜி.எஃப்-2 திரைப்படம் உலகம் முழுக்க இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகம் இந்தியா முழுக்க பிரமாண்டமான கவனத்தைப் பெற்ற நிலையில் அதன் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகியுள்ளது. 

யஷ் நடித்த கேஜி.எஃப் முதல் பாகத்துக்கு ஸ்ரீகாந்த் கெளடா எடிட்டராகப் பணிபுரிந்திருந்தார். பிரசாந்த் நீல் இயக்கிய அதற்கு முந்தைய படமான உக்ரம் படத்துக்கும் அவர்தான் எடிட்டர். ஆனால் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்துக்கு உஜ்வால் குல்கர்னி எடிட்டராகப் பணிபுரிந்துள்ளார். முதல் படத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மேக்கிங் ரீதியாக மிரட்டலாக உள்ளதாக விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

                                                          Yash

ஆச்சர்யப்படுத்திய உஜ்வால் குல்கர்னி

இந்நிலையில் இப்படத்தின் எடிட்டர் உஜ்வால் குல்கர்னி பற்றி ஆச்சர்யமான சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இவ்வளவு பெரிய பிரமாண்ட படத்துக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ள உஜ்வால் குல்கர்னிக்கு வெறும் 19 வயதுதான் ஆகிறதாம். இதில் அடுத்த ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப் படத்துக்கு அவர் கமிட் ஆனபோது அவருக்கு வயது வெறும் 17 தானாம்.

சினிமாவில் எடிட்டிங் என ஒரு துறை இருப்பதே 17 வயதுள்ள சிறுவர்கள் பலருக்குத் தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. இந்நிலையில் அந்த வயதில் இருந்துகொண்டு ஒரு பான் - இந்தியா படத்துக்கு அதிலும் மேக்கிங் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பைக்கொண்ட ஒரு பெரும் பட்ஜெட் படத்துக்கு அவர் எடிட்டராக ஒப்பந்தம் ஆனதுதான் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | பீஸ்ட் VS வலிமை: முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் எது தெரியுமா!?

                                      Ujwal Kulkarni

வாய்ப்பு கிடைத்தது எப்படி?!

தற்போது எந்தப் படத்தின் ட்ரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக் வந்தாலும் அதற்கு Fan Made வெர்சன் உருவாக்குவது ட்ரெண்ட்டாக உள்ளது. கேஜிஎஃப் முதல் பாகம் வந்தபோதும் பலர் Fan Made வீடியோக்கள் வெளியிட்டனர். அதுபோலத்தான் கேஜிஎஃப்-1க்கு Fan Made ட்ரெய்லர் உருவாக்கி வெளியிட்டாராம் இந்த உஜ்வால் குல்கர்னி.

இந்த Fan Made வெர்சனால் ஈர்க்கப்பட்ட பிரசாந்த் நீலின் மனைவி தனது கணவரின் கவனத்துக்கு இதை எடுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து உஜ்வால் குல்கர்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இப்படித்தான் அமைந்ததாம் இந்த வாய்ப்பு. இளம் வயதிலேயே எடிட்டிங்கில் மிரட்டிவரும் உஜ்வால் குல்கர்னிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டு மழை குவிகின்றன.

மேலும் படிக்க | விஜய்யின் டாப்-10 வசூல் படங்கள் இவைதான்!- ‘அந்த’ப் படம் இத்தனை கோடி வசூலா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News