குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தை இயக்கிய ராஜ்மோகன் அட்ரஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தில் அதர்வா கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய ராஜன், “தயாரிப்பாளர்களின் நிலை தற்போது மோசமாக உள்ளது. 5 கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு இறுதி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் தயார் செய்வது கடினமாக உள்ளது.
நடிகர்கள் டப்பிங் பேசுவதற்கு முன்பு முழு சம்பளத்தையும் கொடுக்கவில்லை என்றால் டப்பிங் பேச மறுக்கின்றனர். தயாரிப்பாளர்கள் எந்த அளவிற்குதான் கடன் வாங்குவது? எந்த சொத்தை விற்று தொகையை தயார் செய்வது.
மேலும் படிக்க | மலர் டீச்சர் பார்க்க ஆசையா? ஏப்ரல் 22 ஆம் தேதி ரெடியாகுங்க
சமீபத்தில் வெளியான திரைப்படம் தோல்வியடைந்த நிலையிலும், அந்தப் படத்தின் நடிகர் தன்னுடைய சம்பளத்தை 40 கோடி ரூபாய் உயர்த்திவிட்டார். சினிமாவில் முதலீடு செய்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும். சம்பளம் பெறுபவர்களும் நன்றாக இருக்கவேண்டும் அப்போதுதான் நல்ல சூழல் ஏற்படும்.
சில நடிகர்களின் ரசிகர்கள் தனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். அதை அந்த நடிகர்களே தூண்டி விடுகின்றனர். முன்பு ஒரு காலத்தில் நடிகர் கமல் ஹாசன் தன்னுடைய ரசிகர்களை தூண்டி விட்டு என்னை மிரட்டினார். அந்த ரசிகர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்தப்பட்டனர். ஆனால் கைதுசெய்யப்பட்ட மூன்று ரசிகர்களையும் கமல் கண்டுகொள்ளவில்லை. இதனால் நானே புகாரை வாபஸ் பெற்று, ஜாமினில் எடுத்தேன்” என்றார்.
மேலும் படிக்க | உலக ட்ரெண்டிங்கில் ராக்கி பாய்: K.G.F-ஐ சிலாகித்த Manchester City கால்பந்து அணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR