விக்ரமின் வீடு வரை வந்த ரசிகர்..ஷாக்கான சியான்..வைரலாகும் ட்விட்டர் பதிவு!

விபத்து ஒன்றில் சிக்கி விலா எலும்பு முறிந்த நிலையில் நடிகர் விக்ரம் தன்னுடைய ரசிகர்கருக்கு சோசியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.  

Written by - Ezhilarasi Palanikumar | Last Updated : May 5, 2023, 03:54 PM IST
  • நடிகர் விக்ரம் காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார்.
  • விக்ரமின் ரசிகர் ஒருவர் அவரது வீட்டிற்கே சென்றுள்ளார்.
  • ஷாக்கான விக்ரம் இது குறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
விக்ரமின் வீடு வரை வந்த ரசிகர்..ஷாக்கான சியான்..வைரலாகும் ட்விட்டர் பதிவு! title=

விபத்து ஒன்றில் சிக்கி விலா எலும்பு முறிந்த நிலையில் நடிகர் விக்ரம் தன்னுடைய ரசிகர்கருக்கு சோசியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

விபத்தில் சிக்கிய விக்ரம்:

நடிகர் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 1870 முதல் 1940 காலகட்டத்தில் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை கதைகளை மையமாக வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியானது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளிலும் கூட நடிகர் விக்ரம் நடிகர் விக்ரம் நீண்ட முடிவுடனும் தாடியுடனும் உடல் எடையை குறைத்து தங்கலான் படத்தின் லுக்கில் வந்திருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் கோலார் தங்க வயலில் தொடங்கப்பட்ட தங்களான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட சூட்டிங் சென்னையில் உள்ள evp ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் ஷூட்டிங்கில் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருக்கும்போது நடிகர் விக்ரமுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக அவருக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது இதனால் அவரால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை மருத்துவரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு தற்போது நடிகர் விக்ரம் ஓய்வெடுத்து வருகிறார்.

வீட்டிற்கு வந்த ரசிகர்:

நடிகர் விக்ரம் விபத்தில் காயம் அடைந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர் இந்நிலையில் விக்ரமின் தீவிர ரசிகரான சிவா என்பவர் விக்ரம் வீட்டுக்கு சென்று கையில் ஒரு பதாகையோடு போட்டோ எடுத்து தன்னுடைய ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "get well soon chief chiyan lots of love and hugs" என்று குறிப்பிட்டிருக்கிறார்.மேலும் நீங்க வேகமா குணமடையனும் ஆஸ்கர் உங்களுக்காக வெயிட் பண்ணது என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த ஒரு பதிவை பார்த்த நடிகர் விக்ரம் நிகழ்ச்சியோடு அந்த ரசிகருக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். "உங்கள் அன்புக்கு நன்றி சிவா வீடு வரைக்கும் வந்து அன்பை கொடுத்து இருக்கிறீர்கள், நீங்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும் I'll be back" என்ன பதில் அளித்துள்ளார். இதைப் பார்த்த விக்ரமின் மற்ற ரசிகர்களும் விக்கிரமின் உடல்நிலை சீக்கிரமாக தேற வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Trending News