உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ, டீசர் வெளியானது...

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Last Updated : Oct 26, 2019, 02:51 PM IST
உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ, டீசர் வெளியானது... title=

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைக்கோ.  திரில்லராக மிரட்டும் சைக்கோ படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர் ராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பின் துவக்கத்தில் சைக்கோ படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒவ்வாமை காரணமாக அவர் படத்தில் பணியாற்றவில்லை. பி.சி.ஸ்ரீராமின் உதவியாளரான தன்வீர் ஒளிப்பதிவை கவனித்து வந்தார். தொடர்ந்து நடக்கும் கொலைகளை பற்றிய பிண்ணனி கொண்ட படமாக சைக்கோ இருக்கும் என எதிர்பார்பாக்கப்படுகிறது.

க்ரைம் திரில் பாணியில் வெளிவந்துள்ள இந்த டீசரில் கொலையும் , ரத்தமுமாக காட்சிக்கொரு மரண திகில் கொடுக்கின்றது. ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ள இத்திரைப்படத்தின் டீசரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 

Trending News