தமிழ் ராக்கர்ஸை டச் செய்த ஏவிஎம் - வெளியான வீடியோ

திரைத்துறையினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸைப் பற்றி புதிய வெப்சீரிஸ் ஒன்றை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 4, 2022, 03:39 PM IST
  • வெப் சீரிஸாக வரும் தமிழ் ராக்கர்ஸ்
  • ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருக்கிறது
  • அருண் விஜய் லீட் ரோலில் நடித்துள்ளார்
தமிழ் ராக்கர்ஸை டச் செய்த ஏவிஎம் - வெளியான வீடியோ title=

திரைத்துறையினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ். எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும், படம் வெளியாவதற்கு முன்பே தேதி சொல்லி படங்களை ரிலீஸ் செய்து வந்தனர். குறிப்பாக தமிழ் சூப்பர் ஸ்டார்களின் படங்கள் அனைத்தையும் தமிழ் ராக்கர்ஸ் குறி வைத்தது. இதனால், திரைத்துறையின் எதிர்காலமே கேள்விக்குறியானது. இதன் பின்னணியில் இருக்கும் மாபியா கும்பல் யார் என்பதை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் அதற்கான எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க | ’தளபதி 67’ லோகேஷ் கனகராஜின் யுனிவர்சில் உருவாகிறதா?

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற நடிகர் விஷால், தமிழ் ராக்கர்ஸை ஒழிப்பது மட்டுமே தன்னுடைய முதல் இலக்கு என்று சபதமெல்லாம் எடுத்தார். அதற்காக ஒரு பெரிய டெக் நிபுணர்கள் குழுவை அமைத்து, பைரசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் மும்முரமாக இருந்தார். ஆனால் அவர் எடுத்த முயற்சியும் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் கொடுக்காததால், அந்த திட்டத்தை பாதியிலேயே கைவிட்டார்.டெலிகிராம் செயலி பயன்பாட்டுக்கு வந்த பின்னர், தமிழ் ராக்கர்ஸ் பெயர் மறைந்திருந்தாலும், பல பெயர்களில் புதிய டெலிகிராம் ஐடிக்களில் புதிய படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

வெப்சீரிஸாக மற்றும் படங்கள் எதுவாக இருந்தாலும் படங்கள் ரிலீஸான சில மணி நேரங்களில் ஹெச்டி பிரிண்டுகள் டெலிகிராம்களில் இன்றும் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், இந்த பைரசிகளின் பின்புலத்தையே கதையாக வைத்து ஒரு வெப்சீரிஸை உருவாக்கியிருக்கிறது ஏவிஎம் நிறுவனம். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெப்சீரிஸ், சோனி ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது, அருண் விஜய் லீட் ரோலில் நடித்திருக்கிறார். தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் வெப்சீரிஸின் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் வெப்சீரிஸ் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | சோழா டீ To சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆதித்த கரிகாலன் - வைரலாகும் விக்ரம் புகைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News