சர்ச்சை பேட்டியாளர் மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டுக்கள் எவ்வளவு?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தவர் நடிகர் மன்சூர் அலிகான் (Mansoor Ali Khan)

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 2, 2021, 02:12 PM IST
சர்ச்சை பேட்டியாளர் மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டுக்கள் எவ்வளவு? title=

Tamil Nadu Assembly Election 2021 Results: தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. வாக்கு எண்ணிக்கையின் படி திமுக கட்சி தற்போது வரை முன்னிலையில் உள்ளது.

இந்த தேர்தலில் (TN Assembly Election 2021) தமிழக திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஐ தவிர இந்த தேர்தலில் மற்ற திரையுலக பிரபலங்களான குஷ்பூ, ஸ்ரீபிரியா, சினேகன், மயில்சாமி, உள்ளிட்டவர்கள் பின்னடைவில் தான் உள்ளனர். 

ALSO READ | Tamil Nadu Election Results 2021 Live: ஆரம்ப முதலே முன்னிலை வகிக்கும் திமுக கூட்டணி

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியில் (Naam Tamilar Katchi) இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தவர் நடிகர் மன்சூர் அலிகான் (Mansoor Ali Khan) . இவர் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 41 ஆகும். இது அவரது தரப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் 14 ஆயிரத்து 875 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News