கோ To அயலி..குழந்தை திருமண அவலத்தை தோலுரித்த தமிழ் படைப்புகள்..!

குழந்தை திருமணத்தை தோலுரிக்கும் வகையில் சில தமிழ் படைப்புகள் சில வெளிவந்துள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.  

Written by - Yuvashree | Last Updated : May 27, 2023, 05:14 PM IST
  • சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரம் தலைதுகியுள்ளது.
  • தமிழில் குழந்தை திருமணத்திற்கு எதிராக சில படைப்புகள் உருவாகியுள்ளன.
  • கோ முதல் அயலி வரை குழந்தை திருமணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட படங்கள் சில.
கோ To அயலி..குழந்தை திருமண அவலத்தை தோலுரித்த தமிழ் படைப்புகள்..! title=

இன்று வெளியாகும் பெரும்பாலான படங்கள் வெறும் வணிக நோக்கத்திற்காகவே எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், தமிழில் உள்ள ஒரு  சில இயக்குனர்கள் சமூகத்தில் நடக்கும் அவலங்களை பிரதிபலிக்கும் விதமாக  தங்களதுபடைப்புகளை உருவாக்கி வருகின்றனர்  முக்கியமாக குழந்தை திருமணம் பற்றி வரும் படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஏராளம். இது போன்ற படங்கள் நம்மை சிந்திக்க வைப்பது மட்டுமன்றி, சிலரை திருந்தவும் வைக்கிறது. வாழ்வியல் சூழல், மூடநம்பிக்கை, ஜோசியம் போன்ற பல காரணங்களுக்காக குழந்தை திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இது போன்ற உண்மை சம்பவங்களை வைத்து பலர் படங்களையும் உருவாக்கி வருகின்றனர். ஒரு சில படங்கள் மொத்தமாக குழந்தை திருமணத்தை வைத்து எடுக்கப்படவில்லை என்றாலும் அதில் அழுத்தம் தரும் விதமாக ஒரு சில காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கம். அப்பேற்பட்ட காட்சிகளையும் அந்த காட்சிகள் இடம் பெற்ற படங்களையும் பார்க்கலாம் வாங்க. 

கோ:

கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றி படம் கோ. ஜீவா, க்ருத்திகா, பியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இதில், அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் கோட்டா ஸ்ரீநிவாச ராவ் நடித்திருப்பார். இந்த படத்தில், வில்லன் கதாப்பாத்திரத்தில் வரும் அந்த அரசியல்வாதி ஜோசியக்காரன் சொன்னான் என்றதற்காக, பள்ளிக்கு செல்லும் சிறுமியை திருமணம் செய்து கொள்வார். இதில், எப்படி அந்த குழந்தையின்  தந்தையை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அந்த திருமணத்தை நடத்திக்கொள்கிறார் என்பதை காண்பித்திருப்பர். சில நிமிடங்களே வரும் இந்த காட்சியில் அந்த குழந்தையின் நிலை கடைசியில் என்ன ஆனது என்று காண்பித்திருக்க மாட்டார்கள். அந்த  குழந்தையை திருமணத்திற்கும் மூடநம்பிக்கையும் என்ன தொடர்பு என்பதையும் காட்சிகள் மூலம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் மாபெரும் பலா திருவிழா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்:

இதன் பிறகு  2014 ஆம் ஆண்டு இயக்குனர் பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த 100 நாட்களுக்கு மேல் ஓடிய  படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில், ஸ்ரீதிவ்யா அறிமுகமாகியிருப்பார். இந்த படத்தில் நாயகியின் ஆசிரியையை சைட் அடிக்கும் ஹீரோ கடைசியில் நாயகியையே திருமணம் செய்து கொள்வார். அதற்கு முன்னர் லதா பாண்டியாக வரும் ஸ்ரீதிவ்யாவிற்கு 11ஆம் வகுப்பு படிக்கும் போதே திருமண ஏற்பாடுகள் நடக்கும். அதை சிவகார்த்திகேயன்தான் தடுத்து நிறுத்துவார். காமெடி படம்தான் என்றாலும் நல்ல சமூக கருத்தினை இந்த ஒரு காட்சியின் மூலம் கூறியிருப்பார் பொன்ராம். இப்படத்தில் பள்ளி சிறுமி காவலர் அலுவலகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் வசனம் அனைத்தும் குழந்தை திருமணத்திற்கு எதிராக அமைந்திருக்கும். மேலோட்டமாக பார்த்தால் இது வெறும் நகைச்சுவை காட்சிமட்டுமே  சற்று இந்த காட்சியை  ஒரு நிமிடம் உற்று நோக்கினால் குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திருப்பது தெரியும். இதுமட்டுமின்றி ஆணவக்கொலையை பற்றியும் நகைச்சுவை உணர்வோடு இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது.

அயலி:

கடந்த ஜனவரி மாதம் ஜீ 5 தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற வெப் தொடர், அயலி. இதில், குழந்தை நட்சத்திரமாக அபி நட்சத்திரா நடித்திருப்பார். சில படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் செய்து கொண்டிருந்த இவர், இந்த வெப்தொடர் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார். 500 வருட பழமையான மூடநம்பிக்கை அடங்கிய கலாச்சாரத்தினால் பல பெண்கள் வயதிற்கு வந்த பெண்கள் படி தாண்ட கூடாது, ஊர் எல்லைக்கு போக கூடாது, சிறு வயதிலேயே திருமணம் என பல கோட்பாடுகள் பாேடப்பட்டிருக்கும். இதையெல்லாம் உடைத்தெரியும் அயலியின் கதைதான் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரது மனங்களில் இந்த தொடர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூட சொல்லலாம். மேலும் இதில் பெண் சுதந்திரம், அடக்குமுறை, ஆணாதிக்கம் போன்ற பல அம்சங்கள் அலசப்பட்டிருக்கும். இதையனைத்தையும் இயக்குநர் முத்துகுமார் மிக அழகாக காட்சியமைப்பில் கையாண்டு இருப்பார்.

மேலும் படிக்க | குழந்தை திருமண விவகாரம்: வசமாக சிக்கிய போட்டோ ஆதாரங்கள்-அதிரவைத்த திடுக்கிடும் தகவல்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News