ஒரே நாளில் 6 படங்கள் தியேட்டரில் ரிலீஸ்..! எந்த படத்தை முதலில் பார்ப்பது?

Theatrical Releasese On September 1st: செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை, ஒரே நாளில் 6 படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் முதிலில் எந்த படத்தை பார்ப்பது? 

Written by - Yuvashree | Last Updated : Aug 31, 2023, 06:32 PM IST
  • நாளை ஒரே நாளில் பல படங்கள் திரையரங்கில் வெளியாகின்றன.
  • இதில் சந்தானம், சமந்தா, பாரதிராஜா ஆகியோரது படங்கள் உள்ளது.
  • எந்த படத்தை முதலில் பார்ப்பது? முழு விவரம்.
ஒரே நாளில் 6 படங்கள் தியேட்டரில் ரிலீஸ்..! எந்த படத்தை முதலில் பார்ப்பது?  title=

ஒரே நாளில் 6 படங்கள்: கோலிவுட் சினிமாவை பொருத்தவரை  ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வெளியாகின்றன. இருப்பினும், சில வாரங்களில், ஒரே நாளில் பல படங்கள் வெளியாகின்றன. செப்டம்பர் முதல் நாளான நாளை, ஆறு தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன, மேலும் இது சினிமா விரும்பிகளுக்கு மட்டுமல்ல, திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கொண்டாட்டமான வாரமாக இருக்கிறது. ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால், பல தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு திரைகளை ஒதுக்க தியேட்டர் உரிமையாளர்கள் தலையை பிய்த்துக்கொள்கின்றனர். செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் ஆறு தமிழ்ப் படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. கிக்:

டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு வெளியாகும் சந்தானம் படம், கிக். இதை பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். எப்போதும் போல இதுவும் சந்தானத்தின் காமெடி படமாக இருக்கும். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனின் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | Jawan Pre Release Event: களைக்கட்டிய ஜவான் திருவிழா! வைரலாகும் புகைப்படங்கள்!

2. பரம்பொருள்:

அமிதாஷ், சரத்குமார் மற்றும் ஷாஷ்மிரா பர்தேசி உள்ளிட்டோர் நடித்துள்ள படம், பரம் பொருள். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அரவிந்த் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதன் டீசர் மற்றும் ட்ரைலர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

3. லக்கி மேன்:

யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம், லக்கி மேன். இதில், குட் நைட் படத்தில் நடித்து பிரபலமான ரேச்சல் நடித்துள்ளார். பாலாஜி வேனுகோபால் இயக்கியுள்ள இந்த படத்தில் வீஇரா, அப்துல் லீ, ஆர்.எஸ் சிவாஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சியான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இது நல்ல குடும்ப படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

4. கருமேகங்கள் கலைகின்றன:

இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான் எடுத்துள்ள படம், கருமேகங்கள் கலைகின்றன. இதில், பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அப்பா-மகனுக்குள் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கும் என நம்பப்படுகிறது. இதில், பாரதிராஜா மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் அப்பா-மகனாக நடித்துள்ளனர். 

5.ரங்கோலி:

தமிழ் இயக்குநர் ஏ.எல் விஜய்யின் உறவினர், ஹமரேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ரங்கோலி. இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். இதில் பிரார்த்தனா என்ற பெண் இளம் கதாநாயகியாக வருகிறார். பள்ளி வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய படமாக ரங்கோலி இருக்கும் என நம்பப்படுகிறது. இதன் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

6. குஷி:

தெலுங்கு மொழியில் உருவாகி தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் படம், குஷி. இப்படம், காதல்-காமெடி படமாக உருவாகியுள்ளது. இதை, சிவா நிர்வானா இயக்கியுள்ளார். இதில், விஜய் தேவரகொண்டா நாயகனாகவும், கதாநாயகியாக சமந்தாவும் நடித்துள்ளனர். தமிழ் நாட்டில் இப்படத்திற்கு பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துவிட்டன. ட்ரைலரும் ரசிகர்களை கவர்ந்தது. படத்தை நாளை முதல் திரையரங்குகளில் பார்க்கலாம். 

மேலும் படிக்க | டிடி ரிட்டர்ன்ஸ் to இன்ஃபினிட்டி-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! எதை எப்படி பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News