தீவுதிடலில் தமிழகத்தில் முதல்முறையாக பேரம் பேசுவதன் நோக்கத்தினை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய செயலி semja என்ற செயலியின் தொடக்க விழா நடைபெற்றது , இந்த நிகழ்ச்சியில் 60 நொடிகளில் 60 நபர்கள் இந்த செயலியினை பதுவிறக்கம் செய்து சாதனை படைத்தனர்.
இந்த சாதனை லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடன கலைஞர் ஜானி மாஸ்டர் கலந்து கொண்டார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த "Semja செயலை" நிறுவனர் ராஜா ராதாகிருஷ்ணன், "நாங்க புதியதாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் அந்த செயலியில் ஒரே வாடிக்கையாளர் ஐந்திலிருந்து பத்து ஓட்டுனரிடம் பேசி கொட்டேஷன் வாங்கி அதிலிருந்து பேரம் பேசி பயணம் மேற்கொள்ளலாம் அதுக்கேற்றவாறு இந்த செயலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு ஓட்டுநர் 10 இருக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணத்திற்கான கட்டணத்தை பேரம் பேசி முடிவு செய்ய முடியும் முதல் முறையாக நாங்கள் இதை செயல்படுத்தி உள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | விஜய் அரசியல் பயணம் உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியா? 2026 காத்திருக்கும் டிவிஸ்ட்
தொடர்ந்து பேசிய அவர், “எங்களுடைய செயலியில் பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்னவென்றால் நாம் குறிப்பாக ஒரு ஆட்டோ நிலையத்திற்கு சென்று ஒரு ஓட்டுநர் ஒரு பயணியிடம் மட்டுமே பேரம் பேசி பயணத்தை மேற்கொள்ள முடியும் ஆனால் எங்களது செயலியில் ஒரு ஓட்டுநர் 10 பயணிகளுடன் பேரம் பேசி அந்த பயணத்தை மேற்கொள்ள முடியும் அதுபோல பயணிகளும் 10க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களிடம் பேசி அவர்களை பயணத்தை நிறைவு செய்ய முடியும் அதுக்கு ஏற்றவாறு இந்த செயலி ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது” எனவும் கூறினார்.
மேலும், “எங்கள் செயலியை பதிவிறக்கம் செய்பவர்களுக்கு 20 ரூபாய் சிறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது 100 ரூபாய் வேலட்டில் ஏற்றப்படுகிறது
நாங்கள் கமிஷன் என்று எதுவும் வாங்கவில்லை பிளாட்பார்ம் கட்டணம் என்று 5% நாங்கள் வாங்க இருக்கிறோம்” என்றார்.
செய்தியாளர்களுடன் பேசிய நடன இயக்குனர் ஜான் மாஸ்டர், மக்களின் ரூபாய்க்கு ஏற்றால் போல் நம் அனைத்திலும் பயணம் மேற்கொள்ளலாம். சிறப்பாக இந்த செயலை உருவாக்கி இருக்கிறார்கள். மாண்புமிகு பறை, சரக்கு, ரஜினி ரசிகன், விவசாயி என்னும் நான் என்ற படங்களுக்கு நடன கலைஞராக பணியாற்றி வருகிறேன். நடிகர் விஜயுடன் திரைப்படங்களில் பயணித்துள்ளேன், விஜயின் மூலம் 2026-யில் ஒரு மாற்றம் ஏற்படும் எனவும் விஜய் வந்தவுடன் பொதுமக்களுக்கு ஏதேனும் செய்வார் என்று எதிர்பார்க்கிறார்கள். இளைஞர்கள் அதிக அளவில், விஜய் உடன் இருக்கிறார்கள் நானும் அவருக்கு சப்போர்ட் செய்வேன் என கூறினார்.
மேலும் படிக்க | Vijay Political Entry: கேலிக்குள்ளான விஜய்யின் அரசியல் எண்ட்ரி! வைரலாகும் மீம்ஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ