ரஜினிகாந்த் to லோகேஷ் கனகராஜ்..பட வெற்றிக்காக கார்களை பரிசாக வாங்கிய பிரபலங்கள்..!

Luxurious Cars for Tamil Celebrities: படத்தின் வெற்றிக்கு பரிசாக கார்களை வாங்கிய தமிழ் பிரபலங்களின் லிஸ்ட் இதோ.   

Written by - Yuvashree | Last Updated : Sep 2, 2023, 07:26 PM IST
  • வெற்றி பெற்ற படங்களின் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு கார்கள் பரிசாக கிடைத்துள்ளன.
  • லோகேஷ் கனகராஜ், பிரதீப் ரங்கநாதன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பரிசு பெற்றுள்ளனர்.
  • வேறு யார் யார் இந்த லிஸ்டில் இருக்கின்றனர்? இதோ முழு விவரம்!
ரஜினிகாந்த் to லோகேஷ் கனகராஜ்..பட வெற்றிக்காக கார்களை பரிசாக வாங்கிய பிரபலங்கள்..!  title=

ரஜினிகா்ந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் அவருக்கு ஒரு சொகுசு காரை பரிசாக வழங்கினார். படம் வெற்றி பெற்றால், அந்த படத்தின் தாயாரிப்பார்கள் நடிகர்களுக்கு கார் அல்லது பைக்குகளை பரிசாக வழங்குவது புது ட்ரெண்டாக மாறி வருகிறது. அப்படி படத்தின் வெற்றிக்கு பரிசாக கார்களை வாங்கிய தமிழ் பிரபலங்களின் லிஸ்ட் இதோ. 

பிரதீப் ரங்கநாதன்-கோமாளி:

2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற காமெடி படம், கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். இதை முதன் முதலாக இயக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். யோகி பாபு, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம், 90ஸ் கிட்ஸ்கள் பலரை கவர்ந்ததால் கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், மறந்து பாேன பல விஷயங்களையும் இந்த படத்தில் எடுத்துக்கூறியிருந்தனர். படம் ப்ளாக் பஸ்டர் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதனுக்கு விலை உயர்ந்த ஸ்வான்கி காரை கோமாளி படக்குழுவினர் பரிசாக வழங்கினார். 

பி.எஸ்.மித்ரன்-சர்தார்:

கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம், சர்தார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். இதனை பி.எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். இவர் ஹீரோ, இரும்புத்திரை போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதையடுத்து அவர் இயக்கிய படம், சர்தார். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை, சர்தார் படக்குழுவினர் இணைந்து இவருக்கு வழங்கினர். 

மேலும் படிக்க | வனிதா to ஷ்ருத்திகா..தொழில் அதிபர்களாக வலம் வரும் சின்னத்திரை பிரபலங்கள்!

விக்னேஷ் சிவன்-தானா சேர்ந்த கூட்டம்:

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குநர்களுள் ஒருவராக வளர்ந்திருப்பவர் விக்னேஷ் சிவன். இவர், சூர்யாவை வைத்து 2018ஆம் ஆண்டு தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே பாலாஜி, செந்தில், சுரேஷ் சந்திரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியதற்காக நடிகர் சூர்யா விக்னேஷ் சிவனிற்கு கார் ஒன்றை பரிசளித்திருந்தார். 

தேசிங் பெரியசாமி-கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்:

2020ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியிருந்தார். இதில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். சின்னத்திரை பிரபலம் ரக்ஷன் மற்றும் நிரஞ்சனா அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தனர். படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து படக்குழுவினர் இணைந்து அவருக்கு விலை உயர்ன்ஹ்ட் அகார் ஒன்றை பரிசாக வழங்கினர். 

மாரி செல்வராஜ்-மாமன்னன்:

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படங்களுள் ஒன்று, மாமன்னன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு, ரவீனா ரவி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து, மாரி செல்வராஜ்ஜிற்கு உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார். 

லோகேஷ் கனகராஜ்-விக்ரம்:

கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம், விக்ரம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கினார். 

ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார்-ஜெயிலர்:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் 650 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி மாறன் நெல்சன் மற்றும் ரஜினிக்கு விலை உயர்ந்த பரிசு காரையும் பெரிய தொகை அடங்கிய செக்கையும் வழங்கியுள்ளார். 

மேலும் படிக்க | ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News